மஹாவீர்யர் ( மலையாளம் ) திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.25 / 5.
நடிகர் நடிகைகள் :- நிவின் பாலி, ஆசிப் அலி, லால், ஷான்வி, சித்திக், விஜய் மேனன், மேஜர் ரவி,
மல்லிகா சுகுமாரன், சுதிர் கராமானா, கிருஷ்ண பிரசாத், சூரஜ் எஸ் குரூப் மற்றும் பலர்.
இயக்கம் :- அப்ரீட் ஷைன்.
ஒளிப்பதிவு :- சந்துரு செல்வராஜ்.
படத்தொகுப்பு :- மனோஜ்.
இசை :- இஷான் சாப்ரா.
தயாரிப்பு :- பாலி ஜுனியர் பிக்சர்ஸ் & இந்தியன் மூவி மேக்கர்ஸ்.
ரேட்டிங் :- 3.25 / 5.
பல வருடங்களுக்கு பிறகு ஆக்சன் ஹீரோ பைஜூ என அடுத்தடுத்து இரண்டு ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் அப்ரிட் ஷைன் மூன்றாவது திரைப்படம் நிவின்பாலி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் மஹாவீர்யர்.
ராஜா காலத்தையும் நவீன காலத்தையும் ஒன்றாக இணைத்து கதை மற்றும் திரைக்கதை இந்த மஹாவீர்யர் திரைப்படத்தின் மூலம் கொடுத்து இருக்கிறார்
இயக்குனர் அப்ரிட் ஷைன்.
ராஜா லாலுவுக்கு ஒருநாள் அந்தப்புரத்தில் தூங்கும் போது இரவில் திடீரென தொடர் விக்கல் ஏற்படுகிறது.
அந்த விக்கலை நிறுத்த பல விதமான வைத்தியங்கள் செய்தும் அந்த விக்கல் குணமாகவில்லை.
இந்த நிலையில் மந்திரி ஆசிப் அலியை அழைத்து இனிமேல் பல விதமான
வைத்தியமெல்லாம் இனி வேண்டாம் என கூறுகிறார்.
இந்த நாட்டிலேயே அழகான பெண் ஒருத்தியை அழைத்து வா அவளுடன் நான் சில காலம் அவருடன் சந்தோஷமாக வாழவேண்டும் என மந்திரி ஆசிப் அலிடம் ராஜா லால் உத்தரவிடுகிறார்.
ராஜாவின் உத்தரவுப்படி
இந்த நாட்டிலேயே அழகான
இளம் பெண்ணை ஒருத்தியை தேடி கிளம்புகிறார் மந்திரி ஆசிப் அலி.
ஒரு கிராமத்திற்கு வருகை தந்து மரத்தின் அருகில் அமர்ந்து இருக்கும் சாமியார் கதாநாயகன் நிவின்பாலி மீது சாமி சிலை திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.
அவருக்கு எதிராக சிலர் சாட்சி சொல்ல தனக்கு தானே வாதாடி அவர்களது சாட்சியங்களை உடைக்கிறார் கதாநாயகன் நிவின்பாலி.
ராஜா லாலுவின் மீது கிராமத்தில் உள்ள ஒரு அழகிய ஏழைப்பெண் கொடுத்துள்ள புகார் குற்றத்திற்காக அதே நீதிமன்றத்துக்கு ராஜா லாலுவை அழைத்து
வர, ராஜாவும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
ராஜா லாலுவுக்காக அழகான இளம் பெண்ணை தேடிப்போன மந்திரி ஆசிப் ஆலி, ஒருஃ கிராமத்தை சேர்ந்த அழகிய பெண்ணான கதாநாயகி ஷான்வியை வலுக்காட்டாயமாக தூக்கி வந்து ராஜா லாலுவிடம் மந்திரி ஆசிப் ஆலி ஒப்படைக்கிறார்.
ராஜா லால் தன்னை வலுக்காட்டாயமாக தூக்கி வந்து துன்புறுத்தியதாக தந்தை மூலமாக நீதிமன்றத்தில் புகார் அளிக்கிறார் தான்வி,.
கதாநாயகன் நிவின்பாலியின் வழக்கு சற்று நேரம் தள்ளிவைக்கப்பட்டு ராஜா லாலுவின் வழக்கு விசாரிக்கப்படுகிறது,.
ராஜா லால் எதற்காக அந்த இந்த அழகான இளம்பெண்ணை அழைத்து வரச்சொன்னேன் என்கிற உண்மையை கூறுகிறார்.
நீதிமன்றம் ராஜா லால் சொன்ன காரணத்தை கேட்டு ராஜா லாலுக்கு உதவி செய்வதற்காக கூறிய
நீதிபதி அந்த இளம்பெண்ணை மேல் ஆடைகளை கலைந்து நீதி மன்றத்தில் அந்த இளம்பெண்ணை
சித்தரவதை செய்கிறார்கள்.
இதை பொறுக்காத சாமியார் கதாநாயகன் நிவின்பாலி இதற்கு தான் சமூகமாக தீர்வு காண்பதாக கூறுகிறார்.
இளம்பெண் மூலமாக ராஜா லாலுக்கு பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா? கிடைக்க வில்லையா?
அநத அழகிய இளம் பெண்ணால் வழங்க முடியாமல் போன பிரச்சினை ஏன்ன ? கதாநாயகன் நிவின்பாலி இந்த பிரச்சனைய எப்படி சமாளித்தார் என்பதுதான் இந்த மஹாவீரயர் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த திரைப்படத்தில் நிவின்பாலி கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
சாமியராக வரும் கதாநாயகன் நிவின்பாலி
மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
நீதி மன்றத்தில் கதாநாயகன் நிவின் பாலி வாதாடுவதும் கூட மிகவும் நன்றாகவே இருக்கிறது.
ராஜாவாக வரும் நடிகர் லாலின நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது.
ராஜா லாலுக்கு விக்கல் பிரச்சனையால் சிரமப்படுவதையும் ராஜா என்கிற மிடுக்குடன் நன்றாகவே செய்திருக்கிறார்.
ராஜா லாலுக்கு
விசுவாசமான மந்திரியாக இளம் நடிகர் ஆசிப் அலி கதாபாத்திரத்தில் அருமையாக இருக்கிறார்.
கதாநாயகன் நிவின்பாலியை விட நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் இளம் நடிகர் ஆசிப் அலி.
இந்த மஹாவீர்யர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஷான்வி ஸ்ரீவாத்சவ், அப்பாவி பெண்ணாக நடிப்பிலும் அழகிலும் அசத்துகிறார்.
நீதிபதியாக வரும் சித்திக், வழக்கறிஞராக வரும் லாலு அலெக்ஸ், நீதிமன்றத்தில் மற்ற வழக்கிற்காக வந்த விவாகரத்து தம்பதி, அந்த போலீஸ் கான்ஸ்டபிள் என பலரும் ரசிக்கும்படியான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
சாட்சி சொல்ல வரும் மல்லிகா சுகுமாரனின் வாக்குமூலம் அன்னைக்கு காலைல ஆறுமணி இருக்கும் என்கிற ரோபோ சங்கரின் காமெடியை நினைவூட்டி சிரிப்பையும் வரவழைக்கிறது.
இசையமைப்பாளர் இஷான் சாப்ரா இசை மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவாளர் சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு ஒரே இடம் என்பதால் மிகவும் அருமையாக உள்ளது.
மொத்தத்தில் மஹாவீர்யர் – திரைப்படம் வீரம் இல்லை.