திருச்சிற்றம்பலம் திரை விமர்சனம் ரேட்டிங்:- 3.75/5.

நடிகர் நடிகைகள் :-  தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ரேவதி (கேமியோ) நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், ஸ்ரீரஞ்சனி, வி.ஜே.பப்பு, முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, ஸ்டன்ட் சில்வா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மித்ரன் ஆர் ஜவஹர்.

ஒளிப்பதிவு :- ஓம் பிரகாஷ்.

படத்தொகுப்பு :- பிரசன்னா ஜி.கே.

இசை :- அனிருத் ரவிச்சந்திரன்.

தயாரிப்பு :- சன் பிக்சர்ஸ்

ரேட்டிங் :- 3.75 / 5.

நடிகர் தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’ & ‘உத்தம புத்திரன்’ குட்டி, மதில் போன்ற திரைப்படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.

நடிகர் தனுஷ் நடித்த படிக்காதவன், மாப்பிள்ளை திரைப்படங்களை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் 3வது முறையாக
இந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தையும் தயாரித்துள்ளது.

இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் பல மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் மறைக்கப்பட்ட ஒரு பெண்ணின் காதல் கதையாக மிகவும் சுவாரசியமும், ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர்.

கதாநாயகன் தனுஷ் தனது
தாத்தா பாரதிராஜா மற்றும் தந்தை பிரகாஷ்ராஜ இவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

ஒரு சாலை விபத்தில் கதாநாயகன் தனுஷின் தாய் மற்றும் தங்கையும் இறந்து விட அதற்குக் காரணம் தனது தந்தைதான் என பத்து வருடங்களுக்கு மேலாக பேசிக்கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

கதாநாயகன் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கிறார்கள்

கதாநாயகன் தனுஷின் சோகங்கள் சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளும் தோழியாக நித்யா மேனன் இருக்கிறார்.

உணவு டெலிவரி செய்யும் வேலை தனுஷ் பார்த்து வருகிறார்.

சந்தோஷமாக செல்லும் இவருடைய வாழ்க்கையில் ஒரு சில காதல் வந்து குறிக்கிடுகிறது.

கதாநாயகன் தனுசுக்கு ராஷி கண்ணா மீது பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து காதல் வர ஓரிரு நாளில் அந்த காதல் நிறைவோமலே போய்விடுகிறது.

அடுத்ததாக கிராமத்தில் உள்ள தாத்தா பாட்டி வீட்டுக்கு ஒரு திருமணத்திற்காக செல்ல அங்கே பிரியா பவானி சங்கர் பார்க்க அவர் மீது காதல் ஒரே நாளிலேயே ‘அந்தக் காதலும் கைகூடாமல் போய்விடுகிறது.

கதாநாயகி நித்யா மேனன்தான் உனக்கு பொருத்தமான ஜோடி என தாத்தா பாரதிராஜா சொல்ல அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்துள்ளார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் தனுஷ் சாதாரண டீசர்ட் போட்டுக் கொண்டு பக்கத்து வீட்டு பையனாக கதைக்கு பொருந்தும் நடிப்பை கொடுத்துள்ளார்.

தனது தாத்தாவை நண்பனாக பழகு விதம் இவரது உடல் மொழி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

கதாநாயகன் தனுஷ் தந்தையாக பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார்.

கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ், அனுபவத்திற்கு ஏற்ற நடிப்பினை கொடுத்துள்ளார்.

கதாநாயகன் தனுஷ் தாத்தாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்துள்ளார்.

தாத்தாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜா மிகவும் வித்தியாசமான ஒரு ஜாலியான கதாபாத்திரத்தின் நடிப்பு அருமை.

நக்கல், லொள்ளு என புதுமையை கடைப்பிடித்துள்ள பாரதிராஜாவின் நடிப்பு ரசிகர்களை ஈர்த்துள்ளது.

இந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில்
கதாநாயகியாக
நித்யா மேனன் படுத்து இருக்கிறார்.

கதாநாயகி நித்யா மேனன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன்னுடைய கதாபாத்திரத்தை மிக இயல்பான நடிப்பால் ஸ்கோர் செய்து முழு திரைப்படத்தையும் தாங்கி பிடித்துள்ளார் கதாநாயகி நித்யா மேனன்.

அப்படி ஒரு கனவுத் தோழியை கண்முன் காட்டியிருக்கிறார் கதாநாயகி நித்யா மேனன்.

இப்படி ஒரு தோழி தங்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என 90ஸ் கிட்ஸ்கள் பலரது ஆசை, கனவாக இருக்கும்.

ராஷிகண்ணா, பிரியா பவானி சங்கர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பினை கொடுத்திருக்கின்றனர்.

இவர்களின் நடிப்பு திரைப்படத்தை மேலும் ரசிக்கும் படி செய்துள்ளது.

அனைத்து
கதாபாத்திரங்களையும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர்.

சாதாரண ஒரு கதையை மிகவும் வித்தியாசமாக தெளிவான திரைக்கதையை அமைத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர்.

தேவையற்ற சண்டை, பிரம்மாண்டம், ஆபாசம் இல்லாமல் ஒரு யதார்த்த காதல் கதை குடும்பக் கதையாக இருப்பது ரசிக்க வைக்கிறது.

இசையமைப்பாளர் அனிருத் தனுஷ் கூட்டணி என்றாலே பாடல்கள் பட்டையைக் கிளப்பும்

நீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்து கூட்டணி பாடல்களில் திருப்தி தரவில்லை.

தாய் கிழவி’ பாடல் மட்டும் கொஞ்சம் ஆட்டம் போட வைக்கிறது.

பின்னணி இசை அனைத்தையும் இதற்கு முன்பு கேட்டது போல் இருக்கிறது.

ஒளிப்பதிவில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்.

மொத்தத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் பார்க்கலாம்.