திரைப்பட தயாரிப்பாளர்களை 25 வருடமாக சேரவேண்டிய பல ஆயிரம் கோடி சன் டிவி கலாநிதி மாறன் மோசடி – தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் குமார் குற்றச்சாட்டு.

சென்னை : 21 நவம்பர் 2020 பல வருடங்களாக மூடி மறைக்கப்பட்டு புதைக்கப்பட்டு இருந்த ஒப்பந்தப் பத்திரத்தை போராடி மீட்டெடுக்கப்பட்ட 20 நவம்பர் 2020 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார் அவர்கள்  மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய பல ஆயிரம் கோடி பணம் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் ( சன் டிவி ) நிறுவனம் மோசடி செய்துள்ளனர்.

( சன் டிவி ) சுமங்கலி பப்ளிகேஷன் உடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த 17 மார்ச் 1995 அன்று 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஒப்பந்த பத்திரம் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் உடன் கே ஆர் ஜி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தபோது
இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின் படி (சன் டிவி) சுமங்கலி பப்ளிகேஷன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் (சன் டிவி) சுமங்கலி பப்ளிகேஷன் தர வேண்டியிருக்குது.

இத்தனை வருடங்களாக காணாமல் போய்விட்டதாக கதை விடப்பட்டு வந்த அந்த ஒப்பந்தத்தை போராடி மீட்டெடுத்திருக்கிறேன் என்கிறார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் கூறினார்.

அது குறித்த ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர் அந்த ஒப்பந்த பத்திரத்தின் நகலையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

அவர் சொல்வது போல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பல ஆயிரம் கோடி பணம் வரவேண்டியது இருக்க நட்சத்திர நிகழ்ச்சிகள் நட்சத்திர கிரிக்கெட் என்றெல்லாம் ஏனது சங்கம் தவியாய் தவிக்கிறது என்ற கேள்விதான் எழுகிறது.

தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் அந்த ஆடியோவில் ‘’நமது சங்கத்துல பல வருசமா இருக்குற பிரச்சனை இதுதான்.

தனியார் தொலைக்காட்சிக்கிட்ட நம் சங்கம் போட்டிருந்த ஒரு ஒப்பந்தம் காணாமல் போய்விட்டது.

அது களவாடப்பட்டு விட்டது என்று சொல்லப்பட்டு வந்தது.

அந்த அக்ரிமெண்ட் கிடைக்காததால் நம் சங்கத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரவேண்டியிருக்குது.

இது சம்பந்தமா பல முறை விவாதம் நடந்திருக்குது.

முதலில் அப்படி ஒரு அக்ரிமெண்ட் இருக்குதா இல்லையா? என்ன நடந்தது? என்பது பற்றி பல நிர்வாகிகளுக்குத்தான் தெரியும்.

அந்த அக்ரிமண்ட் நடந்தது உண்மைதான்.

அதுவும் இருக்குது. 17 மார்ச் 1995ல் கே.ஆர்.ஜி. தலைவராக இருந்தபோது சன் டிவி சுமங்கலி பப்ளிகேஷன் தனியார் தொலைக்காட்சிகிட்ட அந்த அக்ரிமெண்ட் போடப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு 6 பாடல்கள் ஒளிபரப்புவதற்கு தொலைக்காட்சி நமது சங்கத்திற்கு ஒரு லட்சம் தரவேண்டும்.

அதே பாடல்கள் இரண்டாம் முறை ரிப்பீட் ஆகும்போது ஒரு பாட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய். அதற்கு அடுத்து எத்தனை முறை டெலிகாஸ்ட் ஆனாலும் அதற்கு 2 ஆயிரம்.

எங்க சேனலைத்தவிர வேறு எந்த சேனலுக்கும் நீங்க பாடல்களை கொடுக்கக் கூடாது.

வேண்டுமானால் தூர்தர்ஷனுக்கு கொடுக்கலாம் என்றெல்லாம் அந்த அக்ரிமெண்டில் இருக்குது. அந்த அக்ரிமெண்ட் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப் படவேண்டும். ஆனா அதுக்கு பிறகு அந்த அக்ரிமெண்ட் புதுப்பிக்கப்படல.

அப்படி செய்யாத பட்சத்தில் சேனல் பாடல்களை பயன்படுத்தி இருக்கக்கூடாது.

ஆனா, 25 வருசமா அந்த சேனல் அனைத்து பட பாடல்களையும் டெலிகாஸ்ட் செய்து வருது.

அதனால 25 வருசத்துக்கும் சேர்த்து ஒரு பெரிய தொகை வரவேண்டி யிருக்குது.

கே.ஆர்.ஜி.க்கு பிறகு பல நிர்வாகங்கள் வந்தது.

ஆனா அந்த அக்ரிமெண்ட் பற்றிய பேச்சே அப்போதெல்லாம் இல்லை.

நம் சங்கத்திற்கு பல கோடிகள் வரவேண்டியது இருக்கும்போது நட்சத்திர நிகழ்ச்சிகள் நட்சத்திர கிரிக்கெட் என்று நாம் கையேந்திக்கிட்டு இருந்தோம்.

இத்தனை வருடமாக இவ்வளவு பல ஆயிரம் கோடிகள் வரவேண்டியிருக்குது என்று சம்பந்தப்பட்ட சேனல்கிட்ட பழைய நிர்வாகிகள் போய் பேசியிருந்தால்.

அந்த சேனல் பணம் கொடுத்திருக்கும். சங்கத்திற்கு ஒரு வழி பிறந்திருக்கும்.

இரண்டு ஆயிரம் கோடி ஆயிரம் கோடி.. 500 கோடி கூட போகட்டும். குறைந்த பட்சம் 100 கோடியாவது வந்திருக்குமே.

இது அனைத்து தயாரிப்பாளர்களோட வாழ்வாதரம் சம்பந்தப்பட்டது.

இதை மூத்த நிர்வாகிகள் செய்யாமல் இருப்பதற்கு காரணம் சுயலாபம். இப்ப அந்த ஒரிஜினினல் அக்ரிமெண்டை, நம்ம திரைத்துறையின் முக்கிய புள்ளிகிட்ட இருந்து போராட்டி மீட்டுக்கொண்டு வந்திருக்கேன்.

இந்த குற்றத்தில் நதிமூலம், ரிஷிமூலம் பார்த்து மேலும் மேலும் பிரச்சனையை வளர்க்காம, 1300 தயாரிப்பாளர்களும் ஒட்டு மொத்தமாக ஒருமித்த கருத்தோடு சேர்ந்து போய் அந்த சேனல்கிட்ட பேசினால் நமக்கான உரிமை உடனே செயல்படுத்தப்படும்.

அப்படி செயல்முறைக்கு வந்தா 12 ஆயிரம் பென்சனை 20 ஆயிரம் ஆக்கலாம். அனைவருக்கும் வீடு கிடைக்கும்.

ஒரு மணி நேரத்திற்கு 10 பாடல்கள் என்று வைத்துக்கொண்டால் ஒரு நாளைக்கு 240 பாடல்கள், 240 பாடல்களுக்கும் 2 ஆயிரம் வீதம் 4 லட்சத்து 80 ஆயிரம். அதையே 365 நாளுக்கு கணக்கு போட்டு பாருங்க. அதையே 25 வருசத்துக்கு கணக்கு போட்டு பாருங்க.

இதனால் அந்த சேனல் மீது குற்றச்சாட்டு வைக்க முடியாது.

நாம்தான் தவறவிட்டோம். அவர்களை குறை சொல்ல முடியாது.

அந்த சேனலிடம் முறையாக சொல்லி நம் பணத்தினை மீட்டெடுப்போம்’’என்று சொல்லி இருக்கிறார் தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ் குமார்.

இதோ அந்த ஒப்பந்த பத்திரம்.