நடிகர் சூர்யா திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளி காலமானார்.

சென்னை 19 ஜூலை 2021

நடிகர் சூர்யா திரைப்படத்தின் இசையமைப்பாளருமான டி.எஸ்.முரளி காலமானார்.

நடிகர் சூர்யா நடித்த ‘ஸ்ரீ’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன் நேற்று (18.7.21) காலமானார்.

இந்த ஸ்ரீ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வசந்தசேனா வசந்தசேனா…’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டாகி பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

கோத்தம் என்ற ஹிந்தி திரைப்படம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இரண்டு பேர் நடித்த “வித்தையடி நானுனக்கு” என்ற திரைப்படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ள அவர், ராமநாதன் கே.பி என்ற பெயரில் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

மனோஜ் பாரதிராஜா தயாரிப்பில் நடிகர் விக்ரம் – நடிகை மீனா பாடிய ஒரு தனி ஆல்பத்துக்கும் இசையமைத்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்த ஸ்ரீ பட இசையமைப்பாளர் திரு.T.S.முரளி அவர்கள், இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

அன்னாரது இறுதி ஊர்வலம் (19.07.2021), காலை 10 மணிக்கு, சாலிகிராமத்தில் நடைபெறும்.

விலாசம்: எண்: 2A, கண்ணம்மாள் தெரு, பரணி காலனி, சாலிகிராமம், சென்னை- 600093.