தனது தந்தை பெயரை சேர்த்து தனது மகனுக்கு பெயர் சூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்.
சென்னை 03 ஆகஸ்ட் 2021
தனது தந்தை பெயரை சேர்த்து தனது மகனுக்கு பெயர் சூட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்.
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில்.. “18 வருடங்களுக்குப் பிறகு இன்று தனது தந்தை எனது விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக..
என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி.
அம்மாவும் குழந்தையும் நலம்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் தற்போது தன் ஆண் குழந்தைக்கு ‘குகன் தாஸ்’ என பெயர் வைத்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை பல வருடங்களுக்கு முன்பே காலமாகிவிட்டார்.
அவரின் தந்தையின் பெயர்
தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தந்தையின் பெயரை தனது மகன் பெயருடன் இணைத்து வைத்துள்ளார் என்பதை இங்கே கவனிக்கலாம்.
https://twitter.com/Siva_Kartikeyan/status/1414518496965238788?s=19
https://twitter.com/Siva_Kartikeyan/status/1422527309341290503?s=19