பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியை கட்டம் கட்டும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்..!

சென்னை 08 ஆகஸ்ட் 2021 பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியை கட்டம் கட்டும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்..!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ( பெப்சி ) தலைவரான ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளர்கள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர்.

நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்தப் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தைத் தயாரிக்கிறார்.

06/08/2021 அன்று துவங்கியிருக்கும் நடிகர் சிலம்பரசன் டிஆர் நடிக்கும் புதிய வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்களுக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ( பெப்சி ) தலைவரான ஆர்.கே.செல்வமணி ஒத்துழைப்பு கொடுத்ததே இந்த போர்க்கொடி தூக்கி உள்ளதற்கு காரணமாம்.

நடிகர் சிலம்பரசன் டிஆர் மீது பல்வேறு தயாரிப்பாளர்கள் மைக்கேல் ராயப்பன் சுபாஷ் சந்திரபோஸ் சிவசங்கர் ஆகிய தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

அன்பானவன் அடங்காவதன் அசராதவன் திரைப்படத்திற்காக பல வருடங்களாக நடிகர் சிலம்பரசன் டிஆரிடம் நஷ்ட ஈடு கேட்டுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

ஆறு வருடங்களுக்கு முனபு கொடுத்த ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸை திருப்பிக் கொடுக்கும் படி நடிகர் சிலம்பரசன் டிஆரிடமும் மற்றும் அவருடைய தந்தை டி ராஜேந்தரிடமும் கேட்டுக்கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ்.

இது நம்ம ஆளு திரைப்படத்தின் ரிலீஸ் செய்யும் போது பணம் பற்றாக்குறையின் காரணமாக பண உதவி செய்த வகையில் 3.50 கோடி ரூபாயை தனக்குத் தர வேண்டும் என்று தற்போது உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரான முரளி ராமசாமியே கேட்டிருக்கிறார்.

இத்தனை தயாரிப்பாளர்கள் பிரச்சினைகளையும் தாண்டி சிலம்பரசன் டிஆர தன நடிக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த முறை அவருக்குக் கடிவாளம் போட்டு பணத்தைத் திரும்பப் பெற்றுவிடலாம் என்று நினைத்த தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சென்ற வாரமே சிலம்பரசன் டிஆரின் புதிய திரைப்படத்திற்கு பெப்சி தொழிலாளர்களை அனுப்பக் கூடாது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியது.

இதையொட்டி நடந்த பேச்சுவார்த்தையின் போதும் நேரில் வந்து கலந்து கொண்ட தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ( பெப்சி ) தலைவர் ஆர் கே செல்வமணி தயாரிப்பாளர் சங்கம் என்ன முடிவெடுக்கிறதோ அதைத் தான் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிவிட்டு வந்தார்.

ஆனால் இரண்டே நாளில் சிலம்பரசன் டிஆர நடிக்கும் புதிய வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் பெப்சியின் தலைவர் ஆர்.கே. செல்வமணி ஓகே சொன்னது தான் இந்தப் போர் கொடிக்கு காரணம்.

இதனால் அதிர்ந்து போன தயாரிப்பாளர் சங்கத்தினர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணியிடம் கேட்டதற்கு “ஷூட்டிங்கிற்கு பிளான் பண்ணிட்டாங்களாம்.

இப்போ நிறுத்தினால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் வரும்.

ஒரு ஷெட்யூல் போகட்டும். அதன் பின்பு பேசித் தீர்ப்போம். என்று மென்மையாகப் பதில் சொன்னாராம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் சங்கத்தினர் 06/08/2021 மாலை அவசர செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள்.

இதில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பதவியில் இருக்கும்வரையிலும் பெப்சிக்கு எந்தவித ஒத்துழைப்பும் கொடுக்கப் போவதில்லை” என்று முடிவெடுத்திருக்கிறார்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்.

தமிழ் திரைப்பட உலகில் முதன்மையான சங்கமே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்தான்.

முதலாளிகள் இல்லாமல் தொழிலாளர்கள் இல்லை தொழிலாளர்கள் இல்லாமல் முதலாளிகள் இல்லை.

தற்போது முதலாளிகளே தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமைக்கு எதிராகத் திரும்பியிருப்பதால் நிலைமை என்னவாகும் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

இப்படிப் பிரச்சினைகள் பல வருடங்களாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.