ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் திரைப்படத்திற்கு மாஸான டைட்டில் வைத்த இயக்குனர் சீனு ராமசாமி.
சென்னை 11 ஆகஸ்ட் 2021
ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் திரைப்படத்திற்கு மாஸான டைட்டில் வைத்த இயக்குனர் சீனு ராமசாமி.
ஸ்கைமேன் பிலிம்ஸ் நிறுவனம் இந்த ‘இடிமுழக்கம்’ திரைப் படத்தைத் தயாரித்து வருகிறது.
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் குமாரும் கதாநாயகியாக காயத்ரி நடித்து வருகின்றனர்.
இதில் செவிலியர் வேடத்தில் நடிக்கிறார் காயத்ரி.
இவர்களுடன் செளந்தர் ராஜா, அருள்தாஸ், மனோபாலா உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள்.
இந்த ‘இடிமுழக்கம்’ திரைப்படத்தில் வைரமுத்து
பாடல்கள் எழுத இசையமைப்பாளராக ரகுநந்தன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தேனியில் நடந்த நிலையில் தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இந்தப் திரைப்படத்துக்கு ‘இடிமுழக்கம்’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.
இப்பட டைட்டில் லுக் போஸ்டரை நடிகரும், எம்எல்ஏவும் ஆன உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் சற்றுமுன் வெளியிட்டனர்.