தமிழ்நாடு அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கக் கோரி, சீமான் அவர்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் சந்திப்பு* | நாம் தமிழர் கட்சி

சென்னை 16 ஆகஸ்ட் 2021 தமிழ்நாடு அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கக் கோரி, சீமான் அவர்களுடன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் சந்திப்பு* | நாம் தமிழர் கட்சி

தமிழ்நாடு முதல்வர் உறுதியளித்தபடி ஸ்டெர்லைட் நாசகார ஆலையை நிரந்தரமாக அகற்றிடும் வகையில் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே சிறப்புச் சட்டம் இயற்றிட வலியுறுத்தியும், கடந்த 2018 மே 22 2018 அன்று தூத்துக்குடி படுகொலைக்குக் காரணமான கொலைக் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரியும், அதிமுக அரசு பயங்கரவாதத்தால் படுகொலையுண்ட ஈகியர் நினைவாக தூத்துக்குடி மையப்பகுதியில் நினைவகம் அமைத்திடக் கோரியும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கக் கோரி, ஈகி ஸ்னோலின் அவர்களின் தாயார் வனிதா அம்மாள் உள்ளிட்ட கூட்டமைப்புப் பொறுப்பாளர்கள், 15-08-2021 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை சென்னை அலுவலகத்தில் சந்தித்தனர்.

அனைவரையும் வரவேற்ற சீமான் அவர்கள், ஈகி ஸ்னோலின் அவர்களின் தாயாரிடம், தாயே! மகனைச் சந்திக்க இவ்வளவு தொலைவு வரவேண்டுமா? சொல்லி அனுப்பியிருந்தால் நானே நேரில் வந்து உங்களைச் சந்தித்து இருப்பேனே என்று அளவளாவினார்.

பின்னர் நடைபெற்ற உரையாடலில், உயிர்ச்சூழலையும் மக்களையும் உயிர் சூழலையும், மக்களையும் அழித்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் அன்றிலிருந்து இன்றுவரை துணை நின்றுவரும் நாம் தமிழர் கட்சிக்கும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கும் கூட்டமைப்பு சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழ்நாடு அரசுக்குக் கூட்டமைப்பு சார்பாக முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு நாம் தமிழர் கட்சி முழுமையான ஆதரவு நல்கிட வேண்டுமெனவும் சீமான் அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

எப்பொழுதும் உங்களுடன் தான் களத்தில் நிற்கிறோம், நாம் தமிழர் பிள்ளைகள் தான் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிரான அறவழிப் போராட்டத்தில் அதிக வழக்குகளைச் சுமந்து நிற்கிறோம். எந்தச் சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை இயங்க அனுமதிக்க விடமாட்டோம் என்றும் தமிழ்நாடு அரசுக்கு தாங்கள் வைத்துள்ள கோரிக்கைகளை ஏற்கனவே நாம் தமிழர் கட்சி வலியுறுத்தி வருவதாகவும், கோரிக்கைகள் நிறைவேற இறுதிவரை துணை நிற்போம் எனக் கூட்டமைப்பினரிடம் சீமான் அவர்கள் உறுதியளித்தார்.

-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி