மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தை பற்றிய அப்டேட் நாளை வெளியாகிறது.

சென்னை 20 ஆகஸ்ட் 2021 மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தை பற்றிய அப்டேட் நாளை வெளியாகிறது.

நாளை மாலை வெளியாகும் ‘சிரஞ்சீவி 153’ படத்தின் அப்டேட்

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளையொட்டி ‘சிரஞ்சீவி 153’ படத்தின் புதிய அப்டேட்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி- மோகன் ராஜா கூட்டணியின் புதிய அறிவிப்பு.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘சிரஞ்சீவி 153’ திரைப்படத்தின் புதிய அப்டேட் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் புதிய படம் ‘சிரஞ்சீவி 153’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு, இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார்.

இப்படத்தின் பணிகள் படப்படிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கியது.

இப்படத்தை கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது.

இந்நிலையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை 5.04 மணி அளவில் இப்படத்தை பற்றிய புதிய அப்டேட்டை வெளியிடுகின்றனர்.

இது தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் ரசிகர்கள், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒரு நாள் முன்னதாகவே திருவிழா போல் உற்சாகத்துடன் கொண்டாட தயாராகி விட்டார்கள்.

இயக்குனர் மோகன் ராஜா ‘சிரஞ்சீவி 153’ படத்தின் திரைக்கதையை வித்தியாசமாக எழுதியிருக்கிறார்.

இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார்.

இதன் காரணமாக ரசிகர்கள் இப்படத்தின் இசையும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடனமும் இருக்கும் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.