தனது புதிய திரைப்படத்திற்கு முதல்முறையாக யுவன் சங்கர் ராஜா இல்லாமல் வேறு இசையமைப்பாளருடன் கைகோர்க்கும் இயக்குநர் விஷ்ணுவர்தன்.

சென்னை 02 ஜூன் 2021

தனது புதிய திரைப்படத்திற்கு முதல்முறையாக யுவன் சங்கர் ராஜா இல்லாமல் வேறு இசையமைப்பாளருடன் கைகோர்க்கும் இயக்குநர் விஷ்ணுவர்தன்

முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இல்லாமல் வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றும் இயக்குநர் விஷ்ணுவர்தன்

இயக்குனர் விஷ்ணுவர்தன் இதுவரை இயக்கிய தமிழ் திரைப்படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி நடிகர் விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ‘மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, அடுத்ததாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் அதர்வாவின் தம்பி நடிகர் ஆகாஷ் கதாநாயகனாக தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமாக உள்ளார்.

தல அஜித்குமாரை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இயக்குனர் விஷ்ணுவர்தன் இதுவரை இயக்கிய தமிழ் படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து உள்ளார்.

அதனால் இந்த திரைப்படத்திற்கும் இசையமைப்பார் யுவன் சங்கர் ராஜாதான் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.