துக்ளக் தர்பார் திரை விமர்சனம். ரேட்டிங் –2.75 /5

நடிகர் நடிகைகள் – விஜய் சேதுபதி, சத்யராஜ், பார்த்திபன், கருணாகரன், பகவதி பெருமாள், ரிஷி கண்ணா, மஞ்சிமா மோகன், சம்யுக்தா, ரிஷா
மற்றும் பலர்.

தயாரிப்பு – செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ.

இயக்கம் – டெல்லி பிரசாத் தீனதயாள்.

ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா, மகேந்திரன் ஜெயராஜ்.

படத்தொகுப்பு – ஆர் கோவிந்தராஜ்

இசை – கோவிந்த வசந்தா

மக்கள் தொடர்பு – யுவராஜ்

திரைப்படம் வெளியான தேதி – 10 செப்டம்பர் 2021
(நேரடியாக டிவி ரிலீஸ்)

ரேட்டிங் –2.75 /5

ஒரு அரசியல் திரைப்படம் என்றால் அது நேரடியான அரசியல் திரைப்படமாக இருக்க வேண்டும்.

அதாவது, ஒருவருக்குள் இருக்கும் இரண்டு விதமான ஆளுமை என்பதை வைத்து கதை திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள்.

தமிழ் திரைப்பட உலகில் ஏற்கெனவே அபூர்வமாய் வந்தவைதான் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த அந்நியன் திரைப்பட விக்ரம் கதாபாத்திரம் போன்றது என்றால் ரசிகர்களுக்கு கண்டிப்பாக புரிந்துவிடும்.

அதிரடியான அரசியல் திரைப்படமாய் கொடுக்க நினைத்து ஒரு வார்டுக்குள் சிக்கிய ஒரு அரசியல் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

சிறுவயதில் தாய், தந்தையை இழந்த விஜய் சேதுபதி தனது தங்கை மஞ்சிமா மோகனுடன் ஹவுசிங் போர்டில் வாழ்ந்து வருகிறார்.

சிறு வயதிலிருந்தே அரசியலில் இறங்க வேண்டும் என்ற தீவிர ஆர்வத்தில் இருப்பவர் கதாநாயகன் விஜய் சேதுபதி.

ஏரியாவில் தலைவராக வலம் வரும் பார்த்திபனைப் பார்த்துத்தான் அவருக்கு அப்படி ஒரு அரசியல் ஆசை வந்து விடுகிறது.

அரசியலில் ஆர்வம் கொண்ட கதாநாயன் விஜய் சேதுபதி, பார்த்திபன் இருக்கும் கட்சியில் தொண்டனாக நுழைகிறார்.

சில பல வேலைகளைச் செய்து காக்கா பிடித்து எப்படியோ பார்த்திபனின் மனதில் இடம் பிடித்துவிடுகிறார் கதாநாயகன் விஜய் சேதுபதி.

அதன் பின்னர் சூழ்ச்சி செய்து மாநகராட்சித் தேர்தலில் கவுன்சிலர் வேட்பாளர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றியும் பெறுகிறார் கதாநாயகன் விஜய் சேதுபதி.

தான் வெற்றி பெற்ற கவுன்சிலர் பதவிக்கு வந்தவுடன் அவர் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளைக் பார்த்திபன் மூலம் ரூ.50 கோடிக்கு கார்ப்பரேட் கம்பெனிக்கு எழுதிக் கொடுத்து விடுகிறார் கதாநாயகன் விஜய் சேதுபதி.

ஆனால், அந்த விஷயம் மீடியாவில் மூலம் வெளிவந்து விடுகிறது.

இது எப்படி வெளியில் வந்தது என பார்த்திபன் கதாநாயகன் விஜய் சேதுபதியிடம் விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

கதாநாயகன் விஜய் சேதுபதி மீதும் அவரது ஏரியா மக்கள் கோபமடைகிறார்கள்.

இது எல்லாவற்றிற்கும் காரணம் தன்னிடம் திடீரென ஏற்படும் ஸ்பிலிட் பர்சனாலிட்டி என்பது கதாநாயகன் விஜய் சேதுபதிக்குத் தெரிய வருகிறது.

இதனால் கதாநாயகன் விஜய் சேதுபதி வாழ்க்கையில் எப்படி எல்லாம் பிரச்சனை ஏற்படுகிறது.

இதனால் கோபமடையும் பார்த்திபன், விஜய் சேதுபதியை பழிவாங்க நினைக்கிறார்.

அதேசமயம் கார்ப்பரேட் கம்பெனிக்கு விற்ற
ரூ 50 கோடி பணம் காணாமல் போகிறது.

இறுதியில் ரூ.50 கோடி கிடைத்ததா? யார் கொள்ளை அடித்தது? கதாநாயகன் விஜய் சேதுபதி வித்தியாசமாக நடந்து கொள்ள காரணம் என்ன? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இந்த துக்ளக் தர்பார் திரைப்படத்தின் மீதிக்கதை.

அமைதிப்படை திரைப்படத்தில் வரும் புரட்சித் தமிழன் சத்யராஜ் நடித்த அமாவாசை கதாபாத்திரம் போல் அப்படியொரு கதாபாத்திரத்தில் கதாநாயகன் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

இதற்கிடையில் ஒரு சண்டையில் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு தலையில் அடிப்பட்டு வித்தியாசமாக நடந்து கொள்கிறார்.

இநத துக்ளக் தர்பார் திரைப்படத்தில் கதாநாயகன் விஜய் சேதுபதி, இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்.

இரண்டு கதாபாத்திரத்திற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.

கதாநாயகன் விஜய் சேதுபதியாக தற்போது எந்த கதாபாத்திரத்தில் இருக்கிறார் என்ற குழப்பம் ஏற்படுகிறது.

ஒரு சில இடங்களில் ‘பீட்சா’ விஜய் சேதுபதி வந்து செல்கிறார்.

மேலும் நடிப்பில் அந்நியன் சியான் விக்ரம், அமைதிப்படை சத்யராஜ் ஆகியோரை ஞாபகப்படுத்துகிறார் கதாநாயகன் விஜய் சேதுபதி.

ஆனால், அவரை வசித்து வரும் ஏரியா மக்கள்
சிங்கம் என்றுதான் அழைப்பார்களாம்.

கதாநாயகன் விஜய் சேதுபதியின் நடிப்பு சிங்கமாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் அது மிகவும் சர்வ சாதாரணமாகத்தான் இருக்கிறது.

சமீபகாலமாக கதாநாயகன் விஜய் சேதுபதி தேர்வு செய்யும் திரைப்படங்களில் உள்ள கதாபாத்திரங்களில் ஒரு அழுத்தம் இல்லாமல், பெரிய ஸ்கோப் இல்லாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

அந்த பழைய கதாநாயகன் விஜய் சேதுபதியைப் பார்க்கவே முடியவில்லையே ஏன் ?.

எல்லா காட்சியிலும் ஒரே மாதிரி பேசுகிறார், ஒரே மாதிரி மேனரிசம் செய்கிறார்.

கிளைமாக்சில் சத்யராஜுடனான காட்சியில் மட்டுமே பழைய கதாநாயகன் விஜய் சேதுபதியைப் பார்க்க முடிகிறது.

தன்னை சோதித்துப் பார்த்துக் கொள்வது அவருக்கு நல்லது.

ஏரியா அரசியல் பெரும்புள்ளியாக பார்த்திபன்.

அவரை எல்லோரும் தலைவரே, தலைவரே என அழைக்கிறார்கள்.

ஆனால், அவருக்கும் மேலே ஒரு தலைவர் இருக்கிறார் என்பதை கிளைமாக்சில் தான் காட்டுகிறார்கள்.

இந்த மாதிரியான கதாபாத்திரமெல்லாம் தனக்கு சர்வ சாதாரணம் என ஊதித் தள்ளுகிறார் பார்த்திபன், சில பல இடங்களில் கதாநாயகன் விஜய் சேதுபதியை பின்னுக்கும் தள்ளுகிறார்.

கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு ஜோடி வேண்டும் என்பதற்காக கதாநாயகி ராஷி கண்ணாவை பேருக்கு இந்த திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட உலகில் வழக்கப்படி கதாநாயகன் யார், அவரது பின்னணி என்ன என்ன வேலை பார்க்கிறார் என்றெல்லாம் பார்க்காமல் காதலில் விழும் மார்வாடி வீட்டுப் பெண் கதாபாத்திரம் கதாநாயகி ராஷி கண்ணாவிற்கு

மொத்தமாக கதாநாயகி ராஷி கண்ணா
ஐந்து காட்சிகளில் வந்தால் மிக பெரிய ஆச்சரியம்.

கதாநாயகன் விஜய் சேதுபதியின் தங்கையாக மஞ்சிமா மோகன். மொத்தமாக நான்கு காட்சிகள், இரண்டு வரி வசனம் பேசியிருந்தால் அதிகம்.

கதாநாயகன் விஜய் சேதுபதியின் தில்லுமுல்லு தனங்களுக்கு எப்போதும் உதவி செய்யும் உயிர் நண்பனாக கருணாகரன்.

கார்ப்பரேட் பெண் முதலாளியாக பிக் பாஸ் புகழ் சம்யுக்தா.

ஒரே ஒரு காட்சியில் கிளைமாக்சில் வந்தாலும் அசத்திவிட்டுச் செல்கிறார் புரட்சித் தமிழன் சத்யராஜ்.

சத்யராஜ்க்கு இன்னும் அதிக காட்சிகள் வைத்திருந்தால் ரசித்து இருக்கலாம்.

கோவிந்த் வசந்தா இசையில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை.

பாடல்கள் என்று சில வந்து சொல்கிறது.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு சிறப்பு.

மாநகராட்சிக்கோ, அரசுக்கோ சொந்தமான ஒரு இடத்தை ஒரு மாநகராட்சி கவுன்சிலர் கையெழுத்து போட்டுக் கொடுத்தாலே அந்த இடத்தை ஒரு கார்ப்பரேட் கம்பெனி வாங்கிக் கொள்ள முடியுமா ?.

திரைப்படத்தின் முக்கியக் கருவே இதுதான், அதிலேயே கோட்டை அல்ல அகல பாதாளத்தை விட்டிருக்கிறார்கள் ?.

அரசியல் திரைப்படம் என்றால் அதில் நம்பகத்தன்மை வேண்டும்.

இதை ஒரு பேன்டஸி அரசியல் படமாகக் கொடுத்து சறுக்கியிருக்கிறார் இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள்.

அதிகமான லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.

‘வாவ்’ என்று ஆரம்பிக்கும் திரைக்கதை, மெல்ல மெல்ல ‘ச்சே’ எதை நோக்கி செல்கிறது என்ற உணர்வு ஏற்படுகிறது.

துக்ளக் தர்பார் ஓகே சுமார்.