பிரண்ட்ஷிப் திரை விமர்சனம்.ரேட்டிங் – 2.5 /5

 

நடிகர் நடிகைகள் – ஹர்பஜன் சிங், ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன். லாஸ்லியா, சதிஷ் , JSK சதீஷ்குமார், M. S. பாஸ்கர் ,பழ .கருப்பையா ,வெங்கட் சுபா, கே.பி.ஒய். பாலா,வேல்முருகன், வெட்டுக்கிளி மற்றும் பலர்.

தயாரிப்பு – சென்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ்

இயக்கம் – ஜான்பால்ராஜ் & ஷாம் சூர்யா

ஒளிப்பதிவு – சி சாந்தகுமார்

படத்தொகுப்பு – தீபக் எஸ் துவாரக்நாத்

இசை – டி எம் உதயகுமார்

மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹமத்.

திரைப்படம் வெளியான தேதி – 17 செப்டம்பர் 2021

ரேட்டிங் – 2.5 /5

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமாகிறார்.

அதுவும் முதல் திரைப்படத்திலேயே கதாநாயகனாக நடித்துள்ளார்.

நடிகர் சந்தனம் நடித்த டிக்கிலோனா திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

அந்த டிக்கிலோனா திரைப்படம் முதலில் வெளியாகி விட்டது.

கோயம்புத்தூரில் உள்ள இஞ்சினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முதலாமாண்டு படிக்கிறார்கள்.

கதாநாயகன் ஹர்பஜன் சிங், சதீஷ் மற்றும் நண்பர்கள் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்கள்.

பெண்கள் யாருமே சேராத அந்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங் குரூப்பில் படிக்க ஒரே ஒரு பெண்ணாக கதாநாயகி லாஸ்லியா அந்த கல்லூரியில் வந்து சேருகிறார்

கதாநாயகி லாஸ்லியாவிடம் நண்பர்கள் யாருமே பேசக் கூடாது பழகவும் கூடாது என கதாநாயகன் ஹர்பஜன் சிங் சொல்கிறது.

ஆனால், போகப் போக லாஸ்லியான குறும்பையும், நல்ல குணத்தையும் பார்த்து அனைவரும் அவருடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார்கள்.

சில நாட்களில் கதாநாயகன் ஹர்பஜன் சிங், சதீஷ் ஆகியோருடன் நெருங்கிய நண்பராக மாறுகிறார் கதாநாயகி லாஸ்லியா.

இந்த நிலையில் கதாநாயகி லாஸ்லியா பற்றிய ஒரு அதிர்ச்சியான தகவல் நண்பர்கள் அனைவருக்கும் தெரிய வருகிறது.

நெருங்கிய தோழியான கதாநாயகி லாஸ்லியா திடீரென்று சில நாட்களில் அவர் இறந்து விடுவார் என்ற தகவல் நண்பர்களுக்கு கிடைக்கிறது.

இதனால் வருத்தமடையும் நண்பர்கள், கதாநாயகி லாஸ்லியாவின் ஆசைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள்.

இறுதியில் கதாநாயகி லாஸ்லியாவின் ஆசை என்ன? நண்பர்கள் நிறைவேற்றினார்களா? இல்லையா? கதாநாயகி லாஸ்லியாவுக்கு என்ன ஆனது? என்பதே இந்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஹர்பஜன் சிங், படம் முழுக்க அதிக வசனம் பேசாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடனம், ஆக்ஷன் என திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சதீஷ்.

காமெடியை விட சென்டிமென்ட் காட்சிகள் சதீஷுக்கு கைகொடுத்து இருக்கிறது.

Read Also  சுழல் தி வோர்டெக்ஸ் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.75 / 5.

கதாநாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா சுட்டித்தனமாக, இளமை துள்ளளுடன் மிக அருமையாக நடித்து இருக்கிறார்.

இவரது நடிப்பு சில இடங்களில் செயற்கைத்தனமாக இருக்கிறது.

இவருக்கு மேக்கப் போட்டதை கண்ணாடியிலும், காமிராவிலும் ஒழுங்காகப் பார்த்தார்களா இல்லையா என்று தெரியவில்லை. குளோசப் காட்சிகளில் மேக்கப் நிலைமை பரிதாபமாக இருக்கிறது

சிறப்புத் தோற்றத்தில் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன். திரைப்படத்தின் டைட்டில் காட்சியில் அதிரடி சண்டைக் காட்சியில் வருகிறார்.

அதன்பிறகு கிளைமாக்ஸ் நீதிமன்றக் காட்சியில் மட்டுமே வந்தாலும் ஆக்ஷன் மற்றும் நடிப்பில் அசத்தி இருக்கிறார் ஆக்சன் கிங் அர்ஜுன் சில் காட்சிகளில் வந்து அதிரடியான கேள்விகளை எழுப்புகிறார்.

நன்றாக வரும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷகுமார்
வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்

ஹர்பஜனின் நட்பு வட்டாரத்தில் தெரிந்த முகங்களாக சதீஷ், வெட்டுக்கிளி பாலா ஆகிய இருவர் மட்டுமே இருக்கிறார்கள்.

சதீஷ் வழக்கம் போல காமெடி என நினைத்து பேசி சிரிக்க வைக்கிறார்.

பாலா திடீரென வருகிறார், போகிறார். மற்ற நண்பர்கள் ஒவ்வொரு காட்சியிலும் ஆளுக்கொரு காட்சியில் வசனம் பேசுகிறார்கள்.

நட்பை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜான்பால்ராஜ் & ஷாம் சூர்யா

அதே நேரத்தில் நட்பை வெளிப்படுத்தும் விதமான அழுத்தமான காட்சிகள் இல்லாததால் திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் மேலோட்டமாக இருக்கிறது.

ஹர்பஜன் சிங்கை அதிகம் பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார் இயக்குனர்
ஜான்பால்ராஜ் & ஷாம் சூர்யா.

கதாநாயகன் ஹர்பஜன் சிங் அவருக்கென்று கிரிக்கெட் காட்சிகள் வைத்திருப்பது போல் இருக்கிறது.

இடைவேளைக்குப் பிறகு தேவையில்லாத ஒரு கிரிக்கெட் மேட்ச்சைத் திணித்து நேரத்தைக் கடத்துகிறார்கள்.

அதையும் நிஜ விளையாட்டு மைதானத்தில் எடுக்காமல் கிரீன்மேட்டில் மோசமாக எடுத்திருக்கிறார்கள்.

அந்த காட்சியை கிராபிக்ஸ் இல்லாமல் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நாட்டுக்காக பல சாதனைகளை படைத்த ஒரு கிரிக்கெட் வீரர் நடித்த திரைப்படத்தில் இப்படியா கிரிக்கெட் காட்சிகளை படமாக்குவது ?.

பெண்கள் இரவு நேரங்களில் வெளியில் வருவது சரியா என்ற கேள்விக்கு பெண்கள் இந்த நேரங்களில் மட்டும்தான் வெளியில் போக வேண்டும், மற்ற நேரங்களில் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என எந்த சட்டமாவது உள்ளதாக என்று எழுப்பும் கேள்விக்கு தியேட்டர்களில் கைதட்டல் கிடைக்கிறது.

12 மணி இரவிலும் பெண்கள் பயமின்றி செல்லும் போதுதான் இந்த நாட்டிற்கு முழு சுதந்திரம் என்று காந்தி கண்ட கனவு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நிறைவேறவில்லையே என்று படம் பார்க்கும் நம்மளை யோசிக்க வைக்கிறது.

இறுதியில் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசியதற்கு வாழ்த்துகள்.

உதயகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார்.

Read Also  மாறன் திரை விமர்சனம் ரேட்டிங் 2.5 / 5

சாந்த குமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

கிளைமாக்சில் வைத்துள்ள அழுத்தத்தை படத்தின் ஆரம்பத்தில் இருந்து வைத்திருந்தால் இந்த பிரண்ட்ஷிப்பில் நாமும் சேர்ந்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘பிரண்ட்ஷிப்’
திரைப்படம் சுமாரான பிரண்ட்ஷிப்.