தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு டி.ராஜேந்தர் அவர்கள் வேட்புமனு பரிசிலனை கூட்டத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

சென்னை : 23 அக்டோபர் 2020

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு டி.ராஜேந்தர் அவர்கள் பேசுகையில்,

இன்று காலை என்னுடன் சேர்ந்து என் அணி குழுவினரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

எங்களது வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட பின் தேர்வான முக்கிய பொருப்பாளர்களின் பெயர்களை அறிவித்தார்கள்.

அதன் படி

தலைவர் – டி.ராஜேந்தர்.

செயலாளர் – டி. மன்னன் (மன்னன் பிலிம்ஸ்)

செயலாளர் – N. சுபாஷ் சந்திர போஸ் (திருப்பதி பிரதர்ஸ்)

பொருளாளர் – ராஜன்

துணைத்தலைவர் – H.முருகன்

துணைத்தலைவர் – P.T. செல்வகுமார்

ஆகியோரின் மனுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

செயற்குழு உறுப்பினர்கள் விவரம் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்த பின் அறிவிக்கப்படும். அணியின் பெயரும் அதோடு சேர்ந்து அறிவிக்கப்படும்” என்றார்.