முந்திரிக்காடு திரைவிமர்சனம் ரேட்டிங்:- 1.5/5.

நடிகர் & நடிகைகள் :- சீமான், புகழ், சுபபிரியா, ஜெயராவ், சோமு, சக்திவேல், கலை சேகரன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மு.களஞ்சியம்.

ஒளிப்பதிவு :- ஜி.ஏ.சிவசுந்தர்.

படத்தொகுப்பு :-  எல்.வி.கே.தாசன்.

இசை :- ஏ.கே.பிரியன்.

தயாரிப்பு நிறுவனம் :-  ஆதி திரைக்களம்.

தயாரிப்பாளர் :- ஆதி திரைக்களம்.

ரேட்டிங் :- 1.5 / 5

பூமணி’, ‘கிழக்கும் மேற்கும்’, ‘மிட்டாமிராசு’ ஆகிய வெற்றிப் திரைப்படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். ‘கருங்காலி’ திரைப்படத்தை இயக்கி அதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மு.களஞ்சியம்.

பிரபல எழுத்தாளர் இமையம் எழுதிய ‘பெத்தவன்’ என்ற நாவல், மு.களஞ்சியம் இயக்கத்தில் ‘முந்திரிக்காடு’ என்ற திரைப்படமாக உருவாகியுள்ளது.

தட்டாங்காடு கிராமத்தில் நடந்த ஒரு அவன கொலை சம்பவம், காவல்துறை ஆய்வாளர் பணிபுரிந்த சீமானை மனரீதியாக அவர் கடுமையாக பாதிக்கப்படுகிறார்.

அந்த ஊரைச் சேர்ந்த ஒரு IAS கனவுடன் வாழும் உயர் சாதியை சேர்ந்த கதாநாயகி சுபபிரியா’ காவல்துறை அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவுடன் வாழும் கீழ் சாதி இளைஞன் கதாநாயகன் புகழ் இருவரும் காதலிக்கிறார்கள் எனக்கூறி சம்பந்தப்பட்டவர்களை சாதி வெறிபிடித்த ஒன்பது மிருகங்கள் இருவரையும் துன்புறுத்துகிறார்கள்,

அந்த கிராமம் ஒன்று திரண்டு கதாநாயகி சுபபிரியா பல வழிகளில் அடித்தும் உதைத்தும் சாதி வெறியர்கள் கிராமத்தின் நடுவில் வைத்து அடித்து உதைத்து முடியை அறுத்து அவமானப்படுத்துகிறார்கள்.

கதாநாயகி சுபபிரியா அத்தனை சாதியக் கட்டுப்பாடுகளையும் மீறி, கதாநாயகன் புகழ்வுடன் வாழ்ந்துவிட வேண்டும் என உறுதியாக வாழ்கிறாள்..

கதாநாயகி சுபபிரியா பல அவமானங்களையும், எல்லா விதமான துயரங்களையும் பொறுத்துக் கொள்கிறாள்.

தன் காதலை அழிக்க நினைக்கிற சாதி வெறிக் கும்பலை எதிர்த்து, உயிரையும் பணயம் வைத்து போராடுகிறாள்.

கதாநாயகி சுபபிரியாவும் கதாநாயகன் புகழ் இருவருடைய காதல் வெற்றி பெற்றதா இறுதியில் இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? வாழவில்லையா? என்பதுதான் இந்த முந்திரிக்காடு திரைப்படத்தின் மீதி கதை.

இந்த முந்திரிக் காடு திரைப்படத்தில் கதாநாயகனாக புதுமுக நடிகர் புகழ் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் புகழுக்கு புகழிற்கு இன்னும் கொஞ்சம் நடிப்பதற்கு ட்ரைனிங் வேண்டும்.

இந்த முந்திரிக்காடு திரைப்படத்தில் கதாநாயகியாக சுப்ரியா நடித்திருக்கிறார்.

தெய்வம் கதாபாத்திரத்தில் சுப்ப்ரியா வாழ்ந்திருக்கிறார் என சொல்ல வேண்டும்.

நடிகர் சீமான் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.

நடிகர் சீமான், சமுத்திரகனி போல சாதி வெறிபிடித்த இளைஞர்களுக்கு திரைப்படம் முழுவதும் அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்

காவல்துறை அதிகாரியாக வரும் சிமான் அவருடைய, கட்சி கூட்டங்களின்போது, மேடையில் பேசுவதுபோல பல காட்சிகளில் தமிழர் பெருமை தமிழரின் பண்பு என அடுக்கு மொழியில் வசனம் பேசி ஆங்காங்கே கைத்தட்டல் பெறுகிறார்.

கதாநாயகியின் அப்பாவாக ஜெயராவ் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்.

திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் பணிகளை மிக அருமையாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜி.ஏ.சிவசுந்தர். ஒளிப்பதிவு ஓகே ரகம்.

இசையமைப்பாளர் ஏ.கே.பிரியன் இசை மற்றும் பின்னணி இசை பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

சாதிகள் இல்லை என்று எடுக்கும் திரைப்படங்கள் சாதிகள் இருக்கு என்று எடுக்கப்படும் திரைப்படங்கள் தமிழ் திரைப்பட உலகில் எடுக்காமல் விட்டாலே சாதிகள் பிரச்சினைகள் தானாகவே ஒழிந்து விடும் மக்கள் மறக்க நினைப்பதை ஏதற்கு அடிக்கடி நினைவு படுத்த நினைக்கிறீர்கள் ஆண் ஜாதி. பெண் ஜாதி. என்ற தலைப்பில் திரைப்படம் எடுங்கள் இந்த இரண்டு ஜாதிகளை தவிர மற்ற ஜாதிகள் தானாக மறந்துவிடும்.

மொத்தத்தில் முந்திரிக்காடு திரைப்படம் ஜாதி வெறியை தூண்டக்கூடிய இந்த திரைப்படத்தை எடுக்காமல் இருந்திருக்கலாம்.