நானே வருவேன் திரை விமர்சனம் ரேட்டிங் :- 2.75 / 5.

நடிகர் நடிகைகள் :- தனுஷ், இந்துஜா, எல்லி அவரம், ‘இளைய திலகம்’ பிரபு, யோகி பாபு ,ஹியா தவே, பிரணவ், பிரபவ், ஃபிராங்க்கிங்ஸ்டன், சில்வென்ஸ்டன், துளசி, சரவண சுப்பையா, ஷெல்லி N குமார், K செல்வராகவன், மற்றும் பலர்.

எழுத்து இயக்கம் :-  செல்வராகவன்.

தயாரிப்பு :- வி கிரியேஷன்ஸ்.
கலைப்புலி எஸ் தாணு.

ரேட்டிங் :- 2.75 / 5.

இயக்குனர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா நடிகர் தனுஷ் கூட்டணி என்றாலே தனுஷ் ரசிகர்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருப்பார்கள்.

இந்த மூவர் கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து இருப்பதால் இந்த “நானே வருவேன்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கிடையே மிக அதிகமாகவே இருந்தது.

அந்த ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார்கள்.

நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தின் கதையை எழுதினாரா? இல்லை இயக்குனர் செல்வராகவன் எழுதினாரா ? அல்லது தயாரிப்பாளர் தாணுவே ஆளவந்தான் கதையை கொடுத்து மாடிஃபை பண்ணிட்டாரா என்கிற சந்தேகம் திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் தோன்றுகிறது.

இரட்டை வேடங்களில் கதாநாயகன் நடிப்பது அதிலும் அவர்கள் இரட்டையர்களாக பிறப்பது தமிழ் திரைப்பட உலகில் இதற்கு முன் பல திரைப்படங்களில் பார்த்து விட்டோம்.

நடிகர் தனுஷ் இரட்டையர்கள் அண்ணன் கதிர், தம்பி பிரபு
தாய் தந்தையுடன் வாழ்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

அண்ணன் கதிர் வில்லன் (தனுஷ்) கொடூரமான குணம் கொண்டவர்.

தம்பி பிரபு கதாநாயகன் (தனுஷ்) மிகவும் சாந்தமானவன்.

கதிர் வில்லன் (தனுஷ்) குணத்தைத் தாங்க முடியாமல் அவருடைய தந்தை கடுமையாக கண்டிக்கிறார்.

சிறுவயதில் இருக்கும் போது தன் தந்தையை கொலை செய்து விடுகிறான் கதிர் வில்லன் (தனுஷ).

ஒரு நாள் கதிரை வில்லன் (தனுஷ்) கோவில் குளத்தில் தனியாக விட்டுட்டு இன்னொரு கதாநாயகன் (தனுஷ்) மகன் பிரபுவை மட்டும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுகிறார் அவர்களது தாய்.

மகன் கதிர் வில்லன் (தனுஷ்) தனது கணவரை கொலை செய்ததால் அவரை விட்டு பிரிந்து இன்னொரு மகன்
கதாநாயகன் (தனுஷ்) பிரபுவுடன் தாய் வாழ்கிறார்.

இருபது வருடங்களுக்குப் பிறகு பிரபு கதாநாயகன் (தனுஷ்) தனது மனைவி இந்துஜா மற்றும் மகளுடன் குடும்ப வாழ்க்கையில் மிக சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் பிரபுவின் கதாநாயகன் (தனுஷ்) மகள் சத்யா உடம்பில் ஒரு அமானுஷ்ய சக்தி புகுந்து கொள்கிறது.

அமானுஷ்ய சக்தியுடன் மகள் அடிக்கடி பேச ஆரம்பிக்கிறார்.

இதை கண்டறியும் பிரபு கதாநாயகன் (தனுஷ்), தனது மகளை காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறார்.

அமானுஷ்ய சக்தி சதயா உடம்பை விட்டு வெளியேற வேண்டுமென்றால் ஒரு கொலை செய்ய வேண்டும் எனக் கூறுகிறது.

ஆனால், அந்த அமானுஷ்ய சக்தி சதயா உடலுக்குள் புகுந்து கதாநாயகன் (தனுஷ்) பிரபுவிடம் வில்லன் (தனுஷ்) அண்ணன் கதிரை கொலை செய்ய வேண்டும் எனக் கூறுகிறது.
.
இறுதியில் கதாநாயகன் (தனுஷ்) பிரபு வில்லன் (தனுஷ்) அண்ணன் கதிரை கொலை செய்தாரா? செய்யவில்லையா? அந்த அமானுஷ்ய சக்தி யார்? வில்லன் (தனுஷ்) கதிரை கொலை செய்ய சொல்ல காரணம் என்ன? என்பதுதான் இந்த நானே வருவேன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகன் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கதிர் மற்றும் பிரபு என இரண்டு பத்திரங்களிலும் தனுஷ் நடித்து அசத்திருக்கிறார்.

பிரபு கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ், பொறுப்புள்ள தந்தையாக கணவனாக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தனது மகள் மீது அதிகமாக பாசம் காட்டுவது, வருந்துவது, காப்பாற்ற நினைப்பது என்று நடிப்பில் கண்கலங்க வைத்திருக்கிறார்.

கதிர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தனுஷ் மிரட்டலான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

வில்லன் கதிர் சிறு வயதிலிருந்தே சைக்கோத்தனமான குணம் கொண்டவர்.

திரைப்படத்தில் வில்லன் கதிர் கதாபாத்திரம் இடைவேளைக்கு பின்புதான் வருகிறது.

இடைவேளை பின்பு வரும் அந்த வில்லன் கதிர் கதாபாத்திரத்தின் ‘என்ட்ரி’க்கு ரசிகர்களிடம் அப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இரண்டாம் பாதி முழுவதும் அந்தக் வில்லன் கதிரின் கலக்கல்தான் இடம் பெற்றுள்ளது.

நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தனுஷின் நடிப்பு மிகவும் ஸ்டைலிஷாக உள்ளது.

இரண்டு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காண்பித்து தான் ஒரு நடிப்பு அசுரன் என்பதை நிரூபித்திருக்கிறார் தனுஷ்.

கதாநாயகன் தனுஷ் பிரபு ஜோடியாக நடித்து இருக்கும் இந்துஜா, கணவன், மகள் பாசத்திற்காக ஏங்குபவராக நடித்து கவர்ந்து இருக்கிறார்.

வில்லன் கதிர் தனுஷ் ஜோடியாக நடித்து இருக்கும்
எல்லி அவ்ராம் மகன் மீது உள்ள பாசத்திற்காக ஏங்குபவராக நடித்து இருக்கிறார்.

மனநல மருத்துவராக இளைய திலகம் பிரபு, தனுஷின் நண்பனாக யோகி பாபு நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகன் தனுஷின் மகள் சத்யாவாக நடித்திருக்கும் ஹியா தவே நடிப்பில் விரட்டி இருக்கிறார்.

வில்லன் தனுஷின் மகன்களாக நடித்திருக்கும் பிரபவ், பிரணவ் ஆகியோரது நடிப்பு இந்த வயதில் அவ்வளவு இயல்பாக நடிப்பா என்ன ஆச்சரியப்படும் அளவிற்கு நடித்துள்ளார்கள்.

இயக்குனர் செல்வராகவன் கதாபாத்திரம் ஒரு காட்சியில் மட்டும் டக்கென வந்து போகிறது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக உள்ளது.

இவரது பின்னணி இசை திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

ரெண்டு ராஜா, பிஞ்சு பிஞ்சு மழை’ பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.

வீர சூர தீரா’ பாடல் திரைப்படத்தின் டெம்போவை அதிகப்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

புவன் சீனிவாசன் படத் தொகுப்பு கதைக்குத் தேவையான விதத்தில் சரியாக அமைந்துள்ளது.

இரண்டு மணி நேர திரைப்படம் என்பது முக்கியம்.

தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லாதது அருமை.

வித்தியாசமான கதையை வைத்து அப்பா மகள் பாசம், அண்ணன் தம்பி, அப்பா மகன் பாசம் என திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.

முதல் பாதி திரில்லராகவும் இரண்டாம் பாதி ஆக்சனாகவும் திரைக்கதையை அமைத்து இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.

மொத்தத்தில் ‘நானே வருவேன்’ திரைப்படம் தானே வந்தான் வென்றான்.