நேற்று இந்த நேரம் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமைரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், செல்வா, பாலா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சாய் ரோஷன் கே.ஆர்.

ஒளிப்பதிவாளர் :- விஷால்.எம்.

படத்தொகுப்பாளர் :- கோவிந்த் என்.

இசையமைப்பாளர் :- கெவின். என்.

தயாரிப்பு நிறுவனம் :- கிளாபின் ஃபிலிமோடெயின்மென்ட்.

தயாரிப்பாளர் :- கே.ஆர். நவீன் குமார்.

கதாநாயகன் ஷாரிக் ஹாசன், அவருடைய காதலி ஹரிதா மற்றும் நண்பர்கள் அனைவரும் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள்.

ஊட்டிக்கு சுற்றுலாவிற்கு சென்ற  காதலர்களுக்கு இடையிலும், நண்பர்களுக்கு இடையிலும் சில விஷயங்களில் மோதல்கள் ஏற்படுகிறது.

நண்பர்களுக்குள் நடக்கும் மோதலுக்குப் பிறகு கதாநாயகன் ஷாரிக் ஹாசன் திடீரென்று காணாமல் போய்விடுகிறார்.

அதுபற்றி கதாநாயகன் ஷாரிக் ஹாசன் திடீரென்று காணாமல் போனதை அவனுடைய நண்பன் காவல்துறையில் புகார் அளிக்க, காவல்துறையினர் நண்பர்களிடம் காணாமல் போனதை பற்றி விசாரணை  நடத்தி கொண்டிருக்கும் போது, புகார் அளித்த நண்பரும் திடீரென்று காணாமல் போய் விடுகிறார்.

காணாமல் போன இருவரையும் பற்றியும் காவல்துறை அதிகாரி நண்பர்கள் அனைவரையும் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையாக கூறுகிறார்கள்.

இறுதியில் காணாமல் போன கதாநாயகன் ஷாரிக் ஹாசன் மற்றும் அவருடைய நண்பர் இருவரும் கிடைத்தார்களா? கிடைக்கவில்லையா? காணாமல் போன இருவரையும் காவல்துறையினர்  கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா?
என்பதுதான் இந்த நேற்று இந்த நேரம் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த நேற்று இந்த நேரம் திரைப்படத்தில் கதாநாயகனாக ஷாரிக் ஹாசன் நடித்திருக்கிறார்.

வில்லத்தனம் கலந்த கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாகவும் வில்லனாகவும் மிரட்டி இருக்கிறார்.

இந்த நேற்று இந்த நேரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஹரிதா மிக அருமையாக நடித்திருக்கிறார்.

நண்பர்களாக நடித்திருக்கும் மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த்,  அரவிந்த் அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் செல்வா மற்றும் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பாலா என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் விஷாலின் ஒளிப்பதின் மூலம் அழகான ஊட்டி அழகை இன்னும் அழகாக காண்பித்து இருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் விஷாலின் ஒளிப்பதிவு மிகவும் சுமாராக உள்ளது.

படத்தொகுப்பாளர் கோவிந்த், கையில் கத்திரி எடுக்காமல் இந்த திரைப்படத்துக்கு படத்தொகுப்பு செய்திருப்பது திரைப்படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் கெவினின் இசை மற்றும் பாடல்கள் பிண்ணனி இசை கதைக்கு ஏற்றவாறு பயணத்திருக்கிறார்.

ஒரே சம்பவதை வைத்து கதையை கையில் எடுத்துக் கொண்ட இயக்குனர் பல கோணங்களில் திரைக்கதையில் விவரித்து இயக்குநர் சாய் ரோஷன்.கே.ஆர்,  திரைக்கதையை வித்தியாசமாக கையாண்டிருந்தாலும், ஒரே காட்சி திரும்ப திரும்ப வருவது திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தூக்கத்தை வரவழைத்து விடுகிறது. .

மொத்தத்தில், ‘நேற்று இந்த நேரம்’ திரைப்படம் நெடுந்தூர பயணமாக அமைந்திருக்கிறது.