Next அமராவதியில் அரசியலைத் தொடரும் பவன் கல்யாண்
ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற பார்லிமென்ட், சட்டமன்றத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா பெரும் தோல்வியைத் தழுவியது. பவன் கல்யாண் போட்டியிட்ட இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினார். அதனால், அவர் சிறிது காலம் அரசியலில் இருந்து விலகி சினிமாவில் நடிப்பார் என்று சொன்னார்கள்.
ஆனால், பவன் கல்யாண் தற்காலிகமாகக் கூட அரசியலை விட்டு விலகமாட்டார் எனத் தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலத் தலைநகராக உருவாக்கப்பட்டு வரும் அமரவாதி நகருக்கு அவருடைய வீட்டை மாற்றப் போவதாகச் சொல்கிறார்கள். அங்கிருந்து அவருடைய கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத்தப் போகிறாராம். அடுத்த தேர்தலுக்குள் தன் கட்சியை வளர்க்கவும் திட்டமிட்டுள்ளாராம்.
தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் ஹைதராபாத் திரும்பி, சினிமாவில் நடிக்கப் போகிறார் என்ற விஷயத்தைப் பொய்யாக்கி பவன் அரசியலைத் தொடர்வது திரையுலகினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாம்.