NPR அவசியம்; முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் நான் முதல் ஆளாக போராடுவேன் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சற்றுமுன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பல்வேறு கேள்விகளுக்கு அப்போது பதிலளித்தார்.

அவர் பேசியதாவது…

இந்திய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தால் அச்சுறுத்தல் இல்லை.

இந்திய இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் நான் முதல் ஆளாக போராடுவேன்

இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல் என பீதி கிளப்பப்படுகிறது.

அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்திற்காக குடியுரிமை சட்டத்தை பயன்படுத்துகின்றன.

குறிப்பாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கும்போது தீர ஆராய்ந்து இறங்குங்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானது. அது கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.

என்பிஆர் அவசியம்; மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால்தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தரப்பட வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்மன் இன்னும் வரவில்லை.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.