ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.5/5.

நடிகர் & நடிகைகள் :- சத்யா,  விஜயகுமார் ராஜேந்திரன், கோபி அரவிந்த்,  சுதாகர் ஜெயராமன்,  முனிஷ்காந்த், ஜார்ஜ் மேரியன், ரித்விகா, ஹரிஜா, யாஷிகா ஆனந்த், ஆர்.எஸ்.கார்த்திக், ஷரா, அப்துல், கொக்கு மனோகர், அகஸ்டின், சந்தோஷ், எஸ்.கே, நந்தா, அஜித், சாருகேஷ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ரமேஷ் வெங்கட்.

ஒளிப்பதிவாளர் :- ஜோசுவா ஜே பெரெஸ்.

படத்தொகுப்பாளர் :- கணேஷ் சிவா.

இசையமைப்பாளர் :- கௌசிக் கிரிஷ்.

தயாரிப்பு நிறுவனம்:- அக்ஷயா  பிச்சர்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- ராஜன்.

ரேட்டிங் :- 2.5/ 5.

1993 ஆம் ஆண்டு ஆலயம்  திரையரங்கில் நானும் பேய்தான் என்கிற திரைப்படம் பார்த்து நான்கு பேர் இறந்துவிடுகிறார்கள்.

அதேசமயம் அந்த நானும் பேய்தான் திரைப்படத்தின் இயக்குனரும் காணாமல் போய்விடுகிறார்.

நான்கு பேர் இறந்த காரணத்தினால் அந்த ஆலயம்  திரையரங்கில் யாரும் திரைப்படம் பார்க்க வருவதில்லை.

2018 ஆம் ஆண்டு திரை துறையை சேர்ந்த ஜந்து நண்பர்கள் இணைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள்

ஆனால் அதற்கான தயாரிப்பாளர் யாரும் கிடைக்காததால் தனது ஊருக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள்.

அப்படி பஸ் நிலையத்திற்கு செல்லும்போது அருகில் ஒரு திரையரங்கு இருப்பதை பார்த்த, ஜந்து நண்பர்களும் திரைப்படம் பார்த்துவிட்டு செல்லலாம் என முடிவெடுக்கிறார்கள்.

அதன் பிறகு ஜந்து நண்பர்களும் ஆலயம்  திரையரங்கில் ஆபாச திரைப்படம் ஒட அந்த திரைப்படத்தை பார்பதற்கு செல்கிறார்கள்.

ஐ.டி.கம்பெனியில் பணிபுரிந்து வரும் யாஷிகா ஆனந்த் மற்றும் ஹரிஜா அப்போது இவர்களின் நண்பர்கள் வட்டாரத்தில் ஆபாச திரைப்படத்தை பெண்களால் திரையரங்கில் சென்று கண்டிப்பாக பார்க்க முடியாது என விவாதம் எழுகிறது.

இதனை சவாலாக எடுத்துக் கொண்ட யாஷிகா ஆனந்தும், ஹரிஜாவும் நாங்கள் ஆபாச திரைப்படத்தை பார்த்துக் காட்டுகிறோம் என அன்று இரவு ஆபாச திரைப்படம் பார்க்க  திரையரங்கிற்கு செல்கிறார்கள்

மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஆபாச திரைப்படம் பார்க்க வருகிறார்கள்.

பிறகு ஒரு கள்ள காதல் ஜோடி திரைப்படம் பார்க்க திரையரங்கிற்க்கு வருகிறார்கள்.

இவர்கள் உள்ளே வந்து திரைப்படம் பார்க்க ஆரம்பித்த பின் சில அமனுஷிய விஷயங்கள் அந்தத் திரையரங்கில் நடக்கிறது.

அப்போது அந்தத் திரையரங்கில் இறந்த நான்கு பேய்கள் தோன்றி சில கோரிக்கைகளை வைக்கிறது,

நாங்கள் சொல்லும் கோரிக்கையை எங்களுக்கு நிறைவேற்றினால் தான் நீங்கள் அனைவரும் உயிரோடு வெளியே செல்ல முடியும் என பேய்கள் கூறுகின்றனர்,

இந்த நிலையில்  ஆலயம் திரையரங்கில் மாட்டிக் கொண்டுள்ள அனைவரும் பேய்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அங்கிருந்து உயிரோடு தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? இந்த பேய்கள் எதனால், எப்படி இறந்தார்கள் என்பதுதான் இநத ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரைப்படத்தின் மீதி கதை.

இந்த திரைப்படத்தில் முனீஸ் காந்த் திரையரங்கு முதலாளி கதை படத்தில் மிகவும் அருமையாகவும் கொலை வெறியுடன் நடித்திருக்கிறார்.

யாஷிகா ஆனந்த் நடித்துள்ள பேய் திரைப்படம் இது.

வழக்கம் போல் தனது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

யூ டியூப் பிரபலங்களான சத்யமூர்த்தி, விஜய், கோபி அரவிந்த், சுதாகர் ஜெயராமன் என ஒரு பட்டாளமே இநத திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது நடித்திருக்கும் ராஜேந்திரன், ஜார்ஜ் மேரியன், ரித்விகா, ஹரிஜா,  ஆர்.எஸ்.கார்த்திக், ஷரா, அப்துல், கொக்கு மனோகர், அகஸ்டின், சந்தோஷ், எஸ்.கே, நந்தா, அஜித், சாருகேஷ், இவர்கள் அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக செய்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜோசுவா ஜே பெரெஸ் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை ரசிக்க வைத்துள்ளது.

படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா படத்தொகுப்பு சிறப்பாக உள்ளது.

இசையமைப்பாளர் கெளஷிக் கிரிஷ் இசையில் பாடல்களை மற்றும் பிண்ணனி இசை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

அமானுஷ்ய கதையை எடுத்துக்கொண்டு காமெடியாக சொல்ல முயற்சி செய்திருக்கும் இயக்குனர் ரமேஷ் வெங்கட் திரைக்கதையில் சற்று அதிக அளவில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் – ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரைப்படம்
காமெடி கலாட்டாக்களை ரசிக்கும் ரசிகர்கள் ஒருமுறை திரையரங்கிற்கு கண்டிப்பாக விசிட் அடிக்கலாம்.