மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு “காட்பாதர்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது!!!

சென்னை 22 ஆகஸ்ட் 2022 மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு “காட்பாதர்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது!!!

மலையாள திரைப்பட உலகில் பிரபல நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து 2019ம் வர வெளிவந்து 100 கோடிக்கும் மேல் வசூலித்து மிக் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘லூசிபர்’.

இந்த திரைப்படத்தை தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகை நயன்தாரா நடிக்க இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ‘காட் பாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வந்தார்கள்.

இன்று 22- ஆகஸ்ட் -2022 நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு இந்த திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார்கள்.

டீசர் முழுவதும் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் திரைப்படமாக இருக்கும் என உணர்த்துகிறது.

மலையாளத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்த கதாபாத்திரம் சஸ்பென்சாக இருந்து கிளைமாக்சுக்கு முன்பாகத்தான் வரும். அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார்.

அந்த சஸ்பென்சை நேற்று வெளியான டீசரிலேயே உடைத்துவிட்டார்கள்.

டீசரின் துவக்கத்தில் நயன்தாரா, பின்னர் சிரஞ்சீவி, கடைசியாக சல்மான்கான் என ‘லூசிபர்’ திரைப்படத்தைத்தான் இப்படி மாற்றியிருக்கிறார்களா என ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது டீசர்.

மலையாளத்தில் பக்கா அரசியல் திரைப்படமாக இருந்ததை தெலுங்கில் பக்கா மசாலா திரைப்படமாக மாற்றிவிட்டார்கள் போலிருக்கிறது.

இருப்பினும் 24 மணி நேரத்திற்குள்ளாக தெலுங்கு டீசர் 83 லட்சம் பார்வைகளையும், ஹிந்தி டீசர் 24 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.