பத்து தல திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.75 / 5.
நடிகர் & நடிகைகள் :- T.R.சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் வாசு தேவ் மேனன், கலையரசன்,
சௌந்தரராஜன்,திஜே அருணாச்சலம், ரெடின் கிங்ஸ்லி, மனுஷிய புத்திரன், கஜாராஜ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஓப்ளி N. கிருஷ்ணா.
ஒளிப்பதிவு :- ஃபருக் J பாஷா.
படத்தொகுப்பு :- பிரவீன் K.L.
இசை :- A.R.ரகுமான்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்டுடியோ கிரீன் ஃபில்ம்ஸ் (பி) லிமிட்டெட். – (PCN) பென் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர் :- K.E.ஞானவேல் ராஜா – டாக்டர ஜெயந்திலால் காடா.
ரேட்டிங் :- 3.75 / 5
தமிழ் திரைப்பட உலகில் தாதாக்களைப் பற்றிய திரைப்படங்கள் எவ்வளவு வந்திருக்கிறது தாதாக்கள் கதையை எடுத்துக்கொண்டு அதில் அரசியலும் கலந்துதான் கதை இருக்கும்.
அப்படி ஒரு தாதா செய்யும் அரசியலைப் பற்றிய திரைப்படம்தான் சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் வெளி வந்திருக்கும் இந்த ‘பத்து தல’ கன்னட திரைப்பட உலகில் ‘மஃப்டி’ என்ற பெயரில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற திரைப்படம்தான் மஃப்டி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகப்பெரிய தொழிலதிபராகவும் ( ஏ.ஜி.ஆர் ) என்கிற பெயரில் பிரபல தாதாவாகவும் சிலம்பரசன் டிஆர் இருந்து வருகிறார்.
சிலம்பரசன் டிஆர் ( ஏ.ஜி.ஆர் ) யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த தமிழக முதலமைச்சர் என்ற அளவுக்கு செல்வாக்கு மிகுந்தவராக இருந்து வருகிறார்.
தமிழக முதல்வராக இருக்கும் சந்தோஷ் பிரதாப் இரவு நேரத்தில் வெளியே செல்லும் போது திடீரென சிலர் கடத்தி விடுகின்றனர்.
கடத்தப்பட்ட தமிழக முதல்வரை கண்டு பிடிக்க சி பி ஐ யிடம் ஒப்படைக்கப்பட்டு மிகவும் இறங்கி தீவிரமாக தேடி வருகிறது.
தமிழக முதலமைச்சரை கடத்தியது சிலம்பரசன் டிஆர் ( ஏ.ஜி.ஆர் )ராக இருக்கும் என காவல்துறையினர் நெருக்கடி கொடுக்கிறார்கள்.
இதன் இடையே மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் கவுதம் கார்த்திக், சிலம்பரசன் டிஆர் ( ஏ.ஜி.ஆரிடம் ) கையாலாக வேலைக்கு சேர்கிறார்.
காவல்துறையினர் ஒரு பக்கம் அதிகளவில் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்க, மறு பக்கம் பொது மக்களுக்கு இடையே சிலம்பரசன் டிஆர் ( ஏ.ஜி.ஆரை) தவறானதாக காட்டுவதற்கு துணை முதல்வர் கவுதம் வாசுதேவ் மேனன் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
இறுதியில் சிலம்பரசன் டிஆர் ( ஏ.ஜி.ஆர் ) கவுதம் வாசுதேவ் மேனன் போடும் திட்டத்தில் சிக்கிக்கொண்டாரா? சிக்கவில்லையா? தமிழக முதல்வரை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பதுதான் இந்த பத்துதல திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த பத்து தல திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சிலம்பரசன் டி ஆர் நடித்துள்ளார்.
ஏ.ஜி.ஆர் கதாப்பாத்திரத்தில் சிலம்பரசன் டிஆர் ஒட்டவில்லை என்றாலும் ஏ.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடை உடை ஸ்டைலும் நடிப்பிலும் கதாபாத்திரமாகவே ஒன்றிவிட்டார்.
சூப்பர் ஸ்டார் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் டி ஆர் நடித்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என தெரியவில்லை ஆனால் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் டி ஆர் நடித்தது அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
சிலம்பரசன் டி ஆரின் மாஸ் காட்சிகளின் வழியாக ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
சிலம்பரசன் டிஆர் ஏ.ஜி.ஆர் கதாப்பாத்திரத்தில் நடிப்பின் மூலம் திரைப்படத்தை முழுமையாக தாங்கி பிடிக்கிறார்.
ஆக்ஷன் காட்சிகளில் சிலம்பரசன் டிஆர் கலக்கி இருக்கிறார்.
சிலம்பரசன் டி ஆர் ரசிகர்களுக்கு முதல் பாதியில் அளவு சாப்பாடு ஆக கொடுத்து இடைவேளைக்குப் பிறகு முழு சாப்பாடு கொடுத்து தன் ரசிகர்களை பசியை தீர்த்து வைத்துள்ளார்.
கவுதம் கார்த்திக் நல்ல நடிகர் என்பதை இந்த பத்துதல திரைப்படத்தில் நிரூபித்திருக்கிறார்
கவுதம் கார்த்திக் ஆக்சன் காட்சிகளையும் அவர் வரும் காட்சிகளின் மூலம் கைத்தட்டல் பெறுகிறார்.
துணை முதல்வர் கதாபாத்திரத்தில் வரும் கவுதம் வாசுதேவ் மேனன் எதார்த்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்கிறார்.
பிரியா பவானி சங்கர் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிகவும் சிறப்பாக செய்துள்ளார்.
சவுந்தரராஜாவிற்க்கு கொடுக்கப்பட்ட சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிப்பினால் கவனிக்க வைத்திருக்கிறார் .
சாயிஷாவின் குத்தாட்டம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
நடிகை சாயிஷா ஆடியுள்ள ராவடி ராவடி பாடல் தேவையில்லாமல் திணிக்கப்பட்டது போன்று தோன்றுகிறது.
இந்த திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசையில் மிக மிக அற்புதமாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் ஃபருக் பாஷா மிக மிக அருமையான ஒளிப்பதிவு மூலம் விருந்து படைத்துள்ளது.
படத்தொகுப்பாளர் பிரவீன் K.L. படத்தொகுப்பு ஒரு சில இடங்களில் தோய்வு தெரிகிறது.
ஆக்ஷன் காட்சிகளை அனைத்தும் மிக அருமையாக பதிவு செய்துள்ளார்கள்.
துரோகம், அரசியல், வெறுப்பு, கோபம் என அனைத்தையும் ஒன்றினைத்து திரைப்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ஒபிலி என்.கிருஷ்ணா.
விறுவிறுப்பான கதையை யோசித்த இயக்குனர் திரைக்கதையில் சற்று பரபரப்பை கூட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் பத்து தல – திரைப்படம் ராவணனின் கெத்து தல.