மக்கள் விரும்பும் பாடகி ராஜலட்சுமி செந்தில் “லைசென்ஸ்” திரைப்படத்தில் நடிக்கிறார்.!

சென்னை 09 நவம்பர் 2022 மக்கள் விரும்பும் பாடகி ராஜலட்சுமி செந்தில் “லைசென்ஸ்” திரைப்படத்தில் நடிக்கிறார்.!

நார்மல் பிலிம் பேக்டரி சார்பாக இளஞ்செழியன் தனது நண்பர்களுடன் கூட்டுசேர்ந்து தயாரிக்கும் படம்தான்
” லைசென்ஸ்”.

தமிழகம் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் குடிகொண்டிருக்கும் மக்கள் இசை பாடகியான ராஜலட்சுமி செந்தில் இந்த லைசென்ஸ் படம் மூலம் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

பட்டி முதல் சிட்டி வரை பாப்புலராக வலம்வரும் ராஜலட்சுமி செந்தில் திரைப்படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக ” என்ன மச்சான்”
மற்றும் “சாமி என் சாமி” ஆகிய பாடல்களை சொல்லலாம்.

தந்தை மகள் பாசப் பின்னணியுடன் பெண்களின் பாதுகாப்பு தன்மையை பற்றி விவாதிக்கும் பரபரப்பான கதையாக இருக்கும் என்கிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கணபதி பாலமுருகன். இவர் கவுண்டமணி நடித்து வெற்றிகரமாக ஓடிய “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது”.என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கிய வேடத்தில் ராதாரவி நடிக்க முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுக நடிகரான விஜய் பாரத் நடிக்கிறார். மேலும் இதில் மதுரை ரிஷி, குழந்தை நட்சத்திரம் அதிதி பாலமுருகன் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் நடிக்க மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது..

பெண்களின் மேன்மையை எடுத்துரைக்கும் இப்படத்தில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கூடுதல் தகவலாக உள்ளது.

விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.