பின்னணி பாடகி சின்மயி டப்பிங் யூனியனின் அடிப்படை உறுப்பினர் அந்தஸ்தை இழந்தார்!!!

பின்னணி பாடகி சின்மயி டப்பிங் யூனியனின் அடிப்படை உறுப்பினர் அந்தஸ்தை இழந்தார்!!!

சென்னை 09 ஏப்ரல் 2023 பிண்ணனி பாடகி சின்மயி தொடர்ந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆண்டு சந்தா செலுத்தாததால் அவர் டப்பிங் யூனியனில் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டார்.

இனி வரும் காலங்களில் அவர் டப்பிங் யூனியன் உறுப்பினர் இல்லை என்றும் டப்பிங் யூனியன் நிர்வாகம் அவருக்கும் சம்பந்தப்பட்ட யூனியன்கள் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் 2018ஆம் ஆண்டு கடிதம் மூலம் தெரிவித்தது இருந்தது.

அதனை தொடர்ந்து பிண்ணனி பாடகி சின்மயி உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இடைக்காலத்தடை வழங்கியது.

டப்பிங் யூனியன் சார்பாக பதிலுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு மேற்படி இடைக்காலமனுவில் இறுதிவிசாரணை மெற்கொள்ளப்பட்டு இறுதியில் இடைக்காலத்தடை வேண்டி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் தற்போது சின்மயி பெற்ற
இடைக்காலத்தடை மார்ச் 17,2023 பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவின் மூலம் ரத்தாகியுள்ளது.

ஆகவே,சின்மயி டப்பிங் யூனியன் உறுப்பினர் அந்தஸ்தை இழந்துள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நீதிமன்ற ஆணையில் அவர் இடைக்காலத்தடை கோரி சமர்ப்பித்த மனுவில் அவர் தெரிவித்த எந்த கருத்துக்கும் அடிப்படை ஆதாரம் இல்லை என்று அவரது மனுவை தள்ளுபடி செய்து மேற்படி இடைக்கால மனுவில் இறுதி உத்தரவு பிறக்கப்பிட்டுள்ளது.

எனவே, அவர் இனி டப்பிங் யூனியனில் அடிப்படை உறுப்பினர் அந்தஸ்தை கோர இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.