நடிகர் அஜித்குமார் நடிகர் விஜய் ரசிகர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது.!
சென்னை 12 ஜனவரி 2023 நடிகர் அஜித்குமார் நடிகர் விஜய் ரசிகர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது.!
தைத் திங்கள் திருநாளை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த “வாரிசு” மற்றும் அஜித்குமார் நடித்த “துணிவு” ஆகிய இரண்டு திரைப்படங்கள் உலகமெங்கும் வெளியானது.
இந்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது.
எனவே இந்த திரைப்படத்தை வரவேற்கும் வகையில் நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகர் விஜய் ரசிகர்கள் கட்அவுட்டுகள் பேனர்கள் வைத்து இரண்டு திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர்.
இந்தநிலையில் புதுச்சேரியில் உள்ள ரசிகர்கள் வைத்த கட்அவுட்டு மற்றும் பேனர்களை அனுமதியின்றி விதிகளை மீறி வைத்ததாக புதுச்சேரி காவல்துறையினர் அஜித்குமார் மற்றும் விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி உள்ள அண்ணா சாலை, மற்றும் மறைமலை அடிகள் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து இடைஞ்சலாகவும் மற்றும் சட்ட விதிகளை மீறி கட் அவுட் பேனர்கள் வைத்த இரண்டு நடிகர்கள் ரசிகர்கள் மீது புதுச்சேரி காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.