பூமர காத்து திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள்:- விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஜித், மீனா, தேவதர்ஷினி, மனோபாலா, சிங்கம்புலி, போண்டாமணி, நெல்லை சிவா, சிசர் மனோகர், சூப்பர் குட் லட்சுமணன், அப்பு, காதல் அருண், முத்துக்காளை, ஜி.எஸ்.மணி, தேனி முருகன், தீப்பெட்டி கணேசன், விஜய் கணேஷ், செவ்வாழைராசு, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஞான ஆரோக்கிய ராஜா.
ஒளிப்பதிவாளர் :- ஜோ.
படத்தொகுப்பாளர் :- சார்ப் ஆனந்த்.
இசையமைப்பாளர் :- அரவிந்த் ஸ்ரீராம் – மதுரை ஈஸ்வர்.
தயாரிப்பு நிறுவனம் :- ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட்.
தயாரிப்பாளர்கள் :- ஞான ஆரோக்கிய ராஜா, ராணி, ஷர்மிளா தேவி, வனிதா, புகழேந்தி.
ரேட்டிங் :- 2.5/5.
அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் கதாநாயகன் சந்தோஷ் சரவணன் பள்ளியில் படிக்கும் மனிஷா ஜித் ஒருதலையாக காதலித்து வருகிறார்.
அதே சமயம், அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவி கதாநாயகன் சந்தோஷ் சரவணனை ஒருதலையாக காதலித்து வருகிறார்.
பொதுத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் நிலையில் தேர்வுக்கு படிக்க வேண்டிய மாணவ மாணவிகள், தங்களுக்குள் இருக்கும் ஒரு தலையான காதலை சம்பந்தப்பட்டவர்களிடம் காதலை சொல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்க, படிப்பதில் கவனம் செலுத்தாமல் காதலில் கவனம் செலுத்துவது தவறு என்பதை புரிந்துக்கொண்டு தங்களது காதல் கனவை கைவிட்டுவிட்டு மாணவ மாணவிகள் தேர்வுக்காக படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்கிறார்கள்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கதாநாயகன் விதுஷ் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனது காதலை தொடங்குகிறார்.
ஆனால், தான் பள்ளியில் படிக்கும் போது காதலித்த மனிஷா ஜித் இல்லாமல் வேறு ஒரு பெண்ணை அவர் காதலிக்க தொடங்குகிறார்.
இந்த நிலையில் பள்ளியின் காதலித்த அந்தப் பெண்ணை விட்டுவிட்டு தற்போது காதலிக்கும் அந்த பெண் யார்? இந்த முறையாவது அவரது காதல் வெற்றி பெற்றதா? வெற்றி பெறவில்லையா?, காதல் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியது?, என்பதுதான் இந்த ‘பூமர காத்து’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த பூமர காத்து திரைப்படத்தில் சிறு வயது கதாநாயகனாக சந்தோஷ் சரவணன் நடித்திருக்கிறார்.
பள்ளியில் படிக்கும் மாணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் சரவணன், தனது ஒருதலையான காதலை சொல்ல முயற்சிக்கும் போதும், சக மாணவர்களுக்கு நல்ல நல்ல கருத்துகளை சொல்லும் போதும் நடிப்பின் மூலம் கவர்கிறார்.
இந்த பூமர காத்து திரைப்படத்தில் கதாநாயகனாக விதுஷ் நடித்துள்ளார்.
கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விதுஷ், பெற்றோர்களை எதிர்த்து காதல் திருமணம் செய்பவர்களின் நிலையை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் மிகக் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
பள்ளியில் படிக்கும் மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகி மனிஷா ஜித் குறைவான காட்சிகளில் வந்தாலும், தனது வேலையை நிறைவாக செய்து முடித்திருக்கிறார்.
இந்த பூமர காத்து திரைப்படத்தில் கதாநாயகியாக மீனா நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் மீனா, தன்னை காதலிக்கும் கதாநாயகன் விதுஷ்க்கு வைக்கும் பரிசோதனை மூலம் காதல் என்ற பெயரில் பெண்களை வேட்டையாடும் ஆண்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
தான் பெற்ற பிள்ளைகளுக்கு பசிக்கு உணவு இல்லாமல் ரேஷன் கடையில் அரிசிக்காக கெஞ்சும் காட்சிகளில் அவரது நடிப்பு ரசிகர்களை கண் கலங்க வைக்கிறது.
பள்ளி தலைமை ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மனோ பாலா அதே பள்ளியில்
ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவதர்ஷினி இந்த காதல் ஜோடியின் காட்சிகள் அனைத்தும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.
கார் மெக்கானிக் செட் நடத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிங்கம்புலி, மெக்கானிக் சீட் உதவியாளர்களாக போண்டா மணி, அப்பு, காதல் அருண், தீப்பெட்டி கணேசன், காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் நெல்லை சிவா, காவலராக நடித்திருக்கும் சிசர் மனோகர், சூப்பர் குட் லட்சுமணன், முத்துக்காளை, ஜி.எஸ்.மணி, தேனி முருகன், விஜய் கணேஷ், செவ்வாழைராசு அனைவருடைய நகைச்சுவைக் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி. அதிலும், தமிழ்நாட்டை காணவில்லை, என்று முத்துக்காளை காவல்துறையில் புகார் அளிக்கும் காட்சியில் திரையரங்கே சிரிப்பு சத்தத்தால் அதிர்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜோ, கதைக்கு ஏற்ப தனது ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை அருமையாக பயன்படுத்தியிருப்பதோடு, பாடல் காட்சிகளை மிகவும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் அரவிந்த் ஸ்ரீராம் இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.
இசையமைப்பாளர் ஈஸ்வர் ஆனந்தின் பின்னணி இசை கதைக்கேற்றவாறு பயணித்திருக்கிறார்.
காதல் கதையாக இருந்தாலும், அதற்கான திரைக்கதையில் இளைஞர்களுக்கும், சமூகத்திற்கும் பல நல்ல கருத்துகளை சொல்லியிருப்பது மிக அருமையாக இயக்கியிருக்கும் இயக்குனர் ஞான ஆரோக்கிய ராஜாவிற்கு மிகப் பெரிய பாராட்டுக்கள்.
மொத்தத்தில் – இந்த ‘பூமர காத்து’ திரைப்படம் இந்தக் கோடை கத்திரி வெயிலில் திரைப்பட ரசிகர்களை ஜில்லென்று இதமாக இளைப்பாற வைக்கிறது.