பவுடர் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.5 / 5.

நடிகர் நடிகைகள் :- நிகில் முருகன், விஜயஸ்ரீ ஜி, மொட்ட ராஜேந்திரன், வித்யா பிரதீப், சிங்கம்புலி, அனித்ரா நாயர், ஆதவன், சாந்தினி தேவா, வையாபுரி, சிலிமிசம் சிவா, விகி, ஒற்றன் துரை, சதீஷ் முத்து, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விஜய ஸ்ரீ ஜி.

ஒளிப்பதிவு :- ராஜா பாண்டி.

படத்தொகுப்பு :- . குணா.

இசை :- லியாண்டர் லீ மார்ட்டி.

தயாரிப்பு நிறுவனம் :- ஜி மீடியா.

தயாரிப்பாளர்:- ஜெய ஸ்ரீ விஜய்..

ரேட்டிங் :- 3.5 / 5

தமிழ் திரைப்பட உலகை விட்டு விலகி இருந்த நடிகர் சாருஹாசன் அவர்களை மறுபடியும் அழைத்து வந்து தாதா 87 எனற திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வைத்து அந்தத் திரைப்படத்தையும் கம்ர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

தமிழ் திரைப்பட உலகிற்கு தாதா 87 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

பிரபல திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் நிகில் முருகன் கதாநாயகனாக வைத்து பவுடர் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ஒரே இரவில் நடக்கும் ஜந்து கதைகளை ஒன்றிணைத்து திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கும் நிலையில் எம்எல்ஏவால் பாதிக்கப்பட்ட சில இளைஞர்கள் எம்எல்ஏவை கொலை செய்து விடுகிறார்கள்.

கொலை செய்து எம்எல்ஏவின் பாடியை துண்டு துண்டாக வெட்டி டி கேனில் அடைத்து மறைக்க முயற்சி செய்கிறார்கள்.

திரைப்பட துறையில் ஒப்பனை கலைஞர் ஆக இருக்கும் விஜய்ஸ்ரீஜி தனது மகன் ஸ்கூல் பீஸ் கட்ட வழியில்லாமல் பணத்திற்காக ஆன்லைன் கிளாசுக்கு மொபைல் இல்லாமலும் கொலை பழிக்கு ஆளாகிறார்.

சிட்டி கமிஷனர் வீட்டில் ஏதோ ஒன்று தொலைந்து போக அதைப்பற்றி காவல்துறை ஆய்வாளர் ராகவனிடம் விசாரிக்க ஆணையிடுகிறார்.

தனது மகள் அனித்ராவை ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதலனை மிகக் கொடூரமாக தலையில் கல்லைப் போட்டு கொலை செய்கிறார் தந்தை வையாபுரி.

நாளை காலை கதாநாயகி வித்யா பிரதீப் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், தன்னை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டும் நபரை சந்திக்க செல்கிறார்.

கதாநாயகி வித்யா பிரதிப்பை மிரட்டி அந்த நபர் படுக்கைக்கு அழைக்க தனது கை துப்பாக்கி எடுத்து சுட்டு விடுகிறார்.

இரவில் திருடும் கும்பல் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் இருவர் நுழைகிறார்கள்.

அதே அப்பார்ட்மெண்டில் காதலர்களின் ரொமான்ஸ் இருக்கிறார்கள்.

இவை அனைத்தும் ஒரு இரவில் நடக்கிறது.

இதில் கதாநாயகனாக இருக்கும் நிகில் முருகன் தனக்கு பிறந்த குழந்தையை பார்க்க முடியாமல் சிட்டி கமிஷனர் கூறியதால் காவல்துறை ஆய்வாளர் பணியில் செல்கிறார்.

நள்ளிரவில் நடக்கும் இந்த ஜந்து சம்பவங்கள்  எப்படி ஒன்றிணைத்து நேர்கோட்டில் கொண்டு வந்து நிறுத்துகிறார் என்பதுதான் இந்த பவுடர் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பவுடர் திரைப்படத்தில் கதாநாயகனாக நிகில் முருகன் நடித்துள்ளார்.

காவல்துறை ஆய்வாளராக ராகவன் கதாபாத்திரத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

உடல் மொழி, வசனம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

புதுமுக நடிகர் போல் இல்லாமல் நடித்திருப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது.

இதுவரை எந்த ஒரு திரைப்படத்திலும் எற்று நடிக்காத கதாபாத்திரத்தில் இந்த பவுடர் திரைப்படத்தில் வையாபுரி மகளைப் பெற்ற பாசமான தந்தையாக நடித்திருக்கிறார்.

தந்தை கதாபாத்திரத்தில் நடித்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார் வையாபுரி.

இவருடைய அனுபவ நடிப்பு திரைப்படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

மணப்பெண்ணாக வரும் வித்யா பிரதீப், பரிதவிப்பு, அழுகை, கோவம் என நடிப்பில் பலவிதமான வித்தியாசத்தை காண்பித்து இருக்கிறார்.

இந்த பவுடர் திரைப்படத்தில் இயக்குனர் விஜயஸ்ரீ ஜி பரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அனைவருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

இயக்குனர் விஜயஸ்ரீ ஜி ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு, திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பரிதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஐந்து விதமான கதைகளை சரியாக பலவிதமான கிளை கதைகளை அருமையாக ஒருங்கிணைத்திருப்பது மிக் சிறப்பு.

அனித்ரா நாயர், ஆதவன், சில்மிஷம் சிவா மொட்டை ராஜேந்திரன், சாந்தினி தேவா, விகி, ஒற்றன் துரை, சதீஷ் முத்து அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களிடையே மிகவும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் விஜயஸ்ரீ ஜி.

இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைத்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜா பாண்டியின் ஒளிப்பதிவில் கூடுதல் வளம் சேர்த்துள்ளது.

திரைப்படத்தை மிககச்சிதமாக படத்தொகுப்பு செய்திருக்கும் படத்தொகுப்பாளர் குணா கவனத்தை ஈர்த்துள்ளார்.

திரைப்படம் முழுவதும் இரவில் நடப்பதால் அதற்காக மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தில் மனிதக்கறி விற்பனை செய்து வருகிறார் என சுட்டிக்காட்டி உள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.

மொத்தத்ததில் பவுடர் திரைப்படத்தை கண்டிப்பாக பாராட்டலாம்.