பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தின் நிபந்தனைகளை ஒப்புக் கொண்டார் இசைஞானி இளையராஜா காவல்துறை பாதுகாப்புடன் தியானம் செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை : 23 டிசம்பர் 2020

கடந்த 35 வருட காலம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இசைக் கூடத்தில்தான் இசைஞானி இளையராஜா இசையமைப்புப் பணியைச் தொடர்ந்து செய்து வந்தார்.

இசைஞானியின் பாடல்கள் இசையும் சாகா வரம் பெற்ற பல திரைப்பட பாடல்கள் பிரசாத் ஸ்டூடியோவில் தான் உருவானது.

இதனால் சென்டிமெண்ட்டாக பிரசாத் ஸ்டூடியோவில் பணியாற்ற வேண்டும் என்று இசைஞானி இளையராஜா பெரிதும் விரும்பினார்.

இதன் காரணமாகவே தன்னிடம் பணம் இருந்தும் தனக்கென்று தனியாக இசைக்கான ஸ்டுடியோ அவர் உருவாக்கவே இல்லை.

இந்த நிலையில் கடந்த வரும் திடீரென்று இசைஞானி இளையராஜாவின் இசைக் கூடத்தை பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற நிர்வாகம் கூறியது.

இதனால் அதிர்ச்சியடைந்த இசைஞானி இளையராஜா இது பற்றி காவல்துறையில் புகார் அளித்தார்.

இதனை எதிர்த்து 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு இசைஞானி இளையராஜா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அந்த வழக்கில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இருந்தும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் இசைஞானி இளையராஜாவுக்கு அந்த இசைக் கூடத்தைத் தருவதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

மேலும் இந்த நிலையில் பல திரைப்படங்களுக்காக கைப்பட எழுதிய இசைக் கோப்புகள் இசைக் கருவிகள் எனக்கு கிடைத்த விருதுகள் உள்ளிட்டவை ஸ்டுடியோவில் இருக்கிறது.

எனது பொருள்களை எடுத்துக் கொள்ளவும் ஸ்டுடியோவில் அமர்ந்து தியானம் செய்யவும் அனுமதி வழங்க பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளா்களுக்கு உத்தரவிட வேண்டும்.

என கோரி சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் இசைஞானி இளையராஜா செய்து இருந்தார்.

அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இசைஞானி இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க முடியாது என பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் அவர்கள் முன்னிலையில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும் காவல் துறையிடம் அளித்த புகாரையும் வாபஸ் பெறுவதாக உத்தரவாத மனு தாக்கல் செய்தால் அவரை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்கலாம் என பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இசைஞானி இளையராஜா தரப்பில் பிரசாத் ஸ்டுடியோ’வுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற முன் வந்தார்.

தற்போது சிட்டி சிவில் நீதிமன்றம் முழுமையாக இயங்காததால் வழக்கை திரும்ப பெற உத்தரவு இன்னும் கிடைக்கவில்லை என விளக்கமளித்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் அவர்கள் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இசைஞானி இளையராஜாவின் தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி சதீஷ்குமார் அவர்கள் பிரசாத் ஸ்டூடியோவுக்குள் நுழையவும் இசையமைத்த அறையில் அமர்ந்து தியானம் செய்யவும் இசைஞானி இளையராஜாவுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

அவர் தியானம் மேற்க் கொள்ளும் போது இசைஞானி இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்களை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் தனது சொந்த செலவில் எடுத்துச் சென்று அவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார் நீதிபதி சதீஷ்குமார்.

இசைஞானி இளையராஜா பொருட்களின் பட்டியலை சரி பார்க்க வழக்கறிஞர் லட்சுமி நாராயணனை வழக்கறிஞர் ஆணையராக நியமித்தும் உத்தரவிட்டார்.

எந்த தேதியில் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்வது குறித்து இரு தரப்பினரும் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இசைஞானி இளையராஜா ஸ்டூடியோவுக்குள் இருக்கலாம் எனவும், ஸ்டூடியோவுக்குள் செல்லும் இசைஞானி இளையராஜாவுடன் அவரது உதவியாளர்கள் மூன்று பேரை மட்டும் அனுமதிக்கலாம் எனவும் இரு தரப்பு வழக்கறிஞர்கள் உடன் செல்லலாம் எனவும் நீதிபதி சதீஷ்குமார் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் சட்டம் ஒழுங்கு இருவரின் தரப்பில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க போதுமான காவல்துறையினர் பாதுகாப்பை வழங்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார் அவர்கள் இசைஞானி இளையராஜாவின் வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி சதீஷ்குமார்.