பிரேமலு திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- நஸ்லென் கே. கஃபூர், மமீதா பைஜு, அல்தாப் சலீம், ஷியாம் மோகன் எம், அகில பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், சங்கீத் பிரதாப், ஷமீர் கான், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கிரிஷ் ஏ டி.
ஒளிப்பதிவாளர் :- அஜ்மல் சாபு.
படத்தொகுப்பாளர் :- ஆகாஷ் ஜோசப்.
இசையமைப்பாளர் :- விஷ்ணு விஜய்.
தயாரிப்பு நிறுவனம் :- பாவனா ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர்கள் :- ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன்.
கதாநாயகன் நஸ்லென் கே. கஃபூர் கல்லூரியில் படிக்கும் போது தன்னோடு படிக்கும் சக மாணவியை ஒருதலையாக காதலித்து வருகிறார்.
ஒரு நாள் கல்லூரியில் தான் காதலிக்கும் மாணவியை சந்தித்து நமது காதலை சொல்ல நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் என கூட அந்த காதலும் தோல்வியில் முடிகிறது.
தனது காதல் தோல்வியில் ஏற்பட்ட சோகத்தில் இருந்து வெளியேற படிப்பு முடிந்து வெளிநாட்டிற்கு செல்ல கதாநாயகன் நஸ்லென் கே. கஃபூர் முயற்சி செய்கிறார்.
தன்னுடைய முதல் காதலும் தோல்வியில் முடிய தான் வெளிநாட்டுக்கு செல்லலாம் என கனவு முயற்சியும் தோல்வியில் முடிகிறது.
அதன்பின் அந்த ஊரில் இருக்க பிடிக்காமல் தனது வீட்டிலும் இருக்க பிடிக்காமல் தன் நண்பருடன் ஹைதராபாத் செல்கிறார்.
திருமண நிகழ்ச்சியில் கதாநாயகி மமீதா பைஜுவை சந்திக்க நஸ்லென் கே. கபூருக்கு அவர் மீதும்
கண்டவுடன் காதல் மலர்கிறது.
அதனால் சென்னைக்கு செல்ல நினைத்த கதாநாயகன் நஸ்லென் கே. கபூருக்கு கதாநாயகி மமீதா பைஜு மீது காதல் மலர்ந்ததால் தன் காதலுக்காக ஹைதராபாத்திலேயே தங்கி விடுகிறார்.
தனது காதலை கதாநாயகியின் தோழியிடம் கதாநாயகன் நஸ்லென் கே. கஃபூர் தெரிவிக்க, அவரோ கதாநாயகி மமீதா பைஜு எதிர்ப்பார்க்கும் எந்த தகுதியும் உன்னிடத்தில் இல்லை, அதனால் உனது காதலை கதாநாயகி மமீதா பைஜு காதலை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார் எனக் கூறி விடுகிறார்.
கதாநாயகி மமீதா பைஜுவுடன் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பரான ஷ்யாம் மோகனும், கதாநாயகி மமீதா பைஜுவுக்கும் உறவில் இருப்பதாகவும் கூறுகிறார்.
கதாநாயகி மமீதா பைஜுவை பற்றி அவருடைய தோழி கூறிய பிறகும் கதாநாயகி மமீதா பைஜு மீது காதல் கொண்டு அவருடன் பயணிக்கிறார் கதாநாயகன் நஸ்லென் கே. கஃபூர் காதல் வெற்றி பெற்றதா? இல்லை வெற்றி பெறவில்லையா? என்பதுதான் பிரேமலு திரைப்படத்தின் மீதி கதை.
இந்த பிரேமலு திரைப்படத்தில் கதாநாயகனாக நஸ்லென் கே. கஃபூர் நடித்திருக்கிறார்.
சில மலையாள திரைப்படங்களில் கதாநாயகனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்த நஸ்லென் கே. கஃபூர், தற்போது மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த பிரேமலு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அனைத்து மொழி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறார்.
கண்டதும் காதல் கொள்வதும், அந்த காதலுக்காக உருகுவதும், ஏங்குவதும் பிறகு காதல் தோல்வியால் வாடுவதும் வருந்துவதும் என அத்தனை காட்சிகளிலும் ரசிகர்களை சிரிக்க வைத்து குஷிப்படுத்தும் கதாநாயகன் நஸ்லென் கே. கஃபூர், அந்த அளவுக்கு வெள்ளந்தியாக நடித்து தன் கதாப்பாத்திரத்தை உணர்ந்து மிக அருமையாக எடுத்திருக்கிறார்.
இந்த பிரேமலு திரைப்படத்தில் கதாநாயகியாக மமீதா பைஜு நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் மமீதா பைஜு, வசன உச்சரிப்பு, உடல்மொழி, எந்த விசயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அசால்டாக நடிப்பை வெளிப்படுத்தி காட்சிக்கு காட்சி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.
கதாநாயகி மமீதா பைஜு நிச்சயம் இந்திய திரைப்பட உலகில் முக்கியமான இடத்தைப் பிடிப்பார்.
கதாநாயகன் நஸ்லென் கே. கஃபூர் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், தனது டைமிங் காமெடி மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார்.
கதாநாயகன் நஸ்லென் கே. கஃபூர் காதலுக்கு வில்லனாக வந்தாலும் ஷ்யாம் மோகனின் வில்லத்தனம் போல் இல்லாமல் இவருடைய நடிப்பு குழந்தைத்தனமாக இருப்பதோடு நடிப்பை பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கவும் வைக்கிறார்.
கதாநாயகி கதாநாயகி மமீதாவின் பைஜுவின் தோழியாக நடித்திருக்கும் அகிலா பார்கவன், மற்றும் மீனாட்சி ரவீந்திரன், அலுவலக தோழர்களாக நடித்திருக்கும் சமீர் கான், அல்தாப் சலீம் என மற்ற அனைத்து கதாபத்திரங்களும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு, கலர்புல்லாக காட்சிப்படுத்தி, அவர்களின் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் தனது ஒளிப்பதிவு மூலமாக வியக்கும் வகையில் படமாக்கி இருக்கிறார்.
இசையமைப்பாளர் விஷ்னு விஜயின் இசையில் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.
இயக்குநர் கிரிஷ் ஏ.டி, மிகப்பெரிய அளவில் திருப்பங்கள் இல்லாமல் மிக சாதாரணமாக கதையை எடுத்துக்கொண்டு திரைக்கதை மூலம் மிக அருமையாக நகர்த்தி சென்றாலும், சச்சின் மற்றும் ரீனு என்ற இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இளைஞர்கள் கொண்டாடும் ஜாலியான காதல் படத்தை கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் இந்த ‘பிரேமலு’ திரைப்படம் கல்லூரி இளைஞர்கள் கொண்டாடும் கலகலப்பான காதல் படமாக அமைந்திருக்கிறது.