தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிலம்பரசன் டிஆருக்கு விலை உயர்ந்த காரும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு புல்லட்டும் பரிசளித்தார்!!

சென்னை 25 செப்டம்பர் 2022 தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிலம்பரசன் டிஆருக்கு விலை உயர்ந்த காரும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு புல்லட்டும் பரிசளித்தார்!!

நடிகர் சிலம்பரசன் டிஆர் தற்போது நடித்து வெளிவந்த வெந்து தணிந்தது காடு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

வெந்து தணிந்தது காடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்த திரைப்படம் தெலுங்கில் தி லைஃப் ஆஃப் முத்து என்ற பெயரில் வெளியாகி தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது செய்தி என்னவென்றால் இந்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றி விழா சென்னையில் நடந்தது.

நடிகர் சிலம்பரசன் டி ஆர், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் பலர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

வெந்து தணிந்தது காடு வெற்றியில் மகிழ்ச்சியான தயாரிப்பாளர் சிலம்பரசன் டி ஆருக்கு விலையுயர்ந்த டொயோட்டா வேளார் காரையும், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு புத்தம் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட்டையும் பரிசளித்தார்.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சித்தி இதானி, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த ஆக்‌ஷன் திரைப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.