ஆர் ஆர் ஆர், ராதே ஷியாம், பாகுபலி சாதனைகளை முறியடித்து புதிய சாதனையை படைத்தது புஷ்பா.

சென்னை 19 ஏப்ரல் 2021

ஆர் ஆர் ஆர், ராதே ஷியாம், பாகுபலி சாதனைகளை முறியடித்து புதிய சாதனையை படைத்தது புஷ்பா.

அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் புஷ்பா திரைப்படத்தின் டீசர் ஏப்ரல் 7 அன்று வெளியிடப்பட்டு,

புதிய சாதனையை படைத்துள்ளது.

‘Introducing Pushpa Raj’ (புஷ்பராஜ் அறிமுகம்) என தலைப்பிடப்பட்ட டீசர், வெறும் 24 மணி நேரத்தில் 25 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 792 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளையும் வென்றுள்ளது.

தெலுங்கு திரையுலகில் இருந்து இதுவரை வெளியான காணொலிகளில் 24 மணி நேரத்தில் அதிகம் காணப்பட்ட வீடியோ என்ற பெருமையை கதாநாயகனை அறிமுகப்படுத்தும் இந்த பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசர் பெற்றுள்ளது.

இதை கொண்டாடுவதற்காக சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

44 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் பத்து (1.2 Million likes )லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளுடன் யூடியூபில் இன்னமும் டிரெண்டிங்கில் உள்ளது புஷ்பா டீசர்.

24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட 5 டீசர்களில் முதலிடத்தில் உள்ள புஷ்பா, சரிலேரு நீக்கெவ்வரு, ஆர் ஆர் ஆர் மற்றும் சாஹோ டீசர்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.

ஆகஸ்ட் 13 அன்று வெளியாகவுள்ள புஷ்பா, அல்லு அர்ஜுனின் முதல் அகில இந்திய படமாகும். சுகுமார் இயக்கியுள்ள இந்த அசல் ஆக்‌ஷன் திரில்லரை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.