ரயில் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, ரமேஷ் வைத்யா, செந்தில் கோச்சடை, ஷமீரா, பிண்ட்டூ, வந்தனா, பேபி தனிஷா, சுபாஷ், தங்கமணி பிரபு, ரமேஷ் யந்த்ரா, சாம் டேனியல், ராஜேஷ், ராமையா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பாஸ்கர் சக்தி.

ஒளிப்பதிவாளர் :- தேனிஈஸ்வர்.

படத்தொகுப்பாளர் :- நாகூரான் இராமச்சந்திரன்.

இசையமைப்பாளர் :- S.J. ஜனனி.

தயாரிப்பு நிறுவனம் :- டிஸ்கவரி சினிமாஸ்.

தயாரிப்பாளர் :- வேடியப்பன்.

ரேட்டிங்:- 2.75/5.

தேனி மாவட்டம் அருகில் உள்ள வடபுதுப்பட்டி எனற கிராமத்தில் கதாநாயகன் குங்குமராஜ் எலெக்ட்ரிசியன் வேலை பார்த்துக்கொண்டு சம்பாதிக்கும் அனைத்து பணத்தையும் குடித்து அழித்துக் கொண்டிருக்கிறார்.

கதாநாயகன் குங்குமராஜ் அது மட்டுமல்லாமல் மனைவி வைரமாலாவிற்க்கு திருமணத்திற்கு போட்ட நகைகளை அனைத்தையும் வித்துக் குடித்து விட்டார்.

கதாநாயகன் குங்கும ராஜிக்கு ரமேஷ் வைத்தியா வேலை வெட்டிக்கு செல்லாமல் குடியே வேலையாக கிடக்கிறார்கள்.-

கதாநாயகன் குங்குமராஜ் வைரமாலா வசிக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் பர்வேஸ் மெஹ்ரூ என்ற வடமாநில இளைஞன் ஒருவன் இந்த கிராமத்தில் உள்ள பஞ்சு மில் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்த்துக் கொண்டு அங்கே தங்கியிருக்கிறார்.

வடமாநில இளைஞன் பர்வேஸ் மெஹ்ரூவிடம் கதாநாயகன் குங்குமராஜின் மனைவி வைரமாலா நெருங்கி பழகுவதை பார்த்து கதாநாயகன் குங்குமராஜ் சந்தேகப்படுகிறார்.

அது ஒரு பக்கம் இருக்க கார்த்திகை தீபத்தன்று தலைக்கால் தெரியாமல் போதையில் வைரமாலாவை கதாநாயகன் குங்குமராஜ் அடிக்கும் போது, வடமாநில இளைஞன் பர்வேஸ் மெஹ்ரூ விலக்கி விடுகிறான்.

அப்போது எதிர்பாராதவிதமாக கதாநாயகன் குங்குமராஜை வடமாநில இளைஞன் பர்வேஸ் மெஹ்ரூ அடித்து தள்ளி விடுகிறான்.

இதனால் ஆத்திரமடைந்த கதாநாயகன் குங்குமராஜ் அவருடைய நண்பர் ரமேஷ் வைத்தியா வடமாநில இளைஞன் பர்வேஸ் மெஹ்ரூ கொலை செய்வதற்கு ப்ளான் போடுகிறார்கள்.

ஆனால் வடமாநில இளைஞன் பர்வேஸ் மெஹ்ரூ ஒரு சாலை விபத்தில் இறந்துவிடுகிறான்.

வடமாநில இளைஞன் பர்வேஸ் மெஹ்ரூ இறந்த உடலை கதாநாயகன் குங்குமராஜ் குடியிருக்கும் வீட்டிற்கு காவல் துறையினர் கொண்டு வந்து வைக்கிறார்கள்

காவல்துறையினர் வடமாநில இளைஞன் பர்வேஸ் மெஹ்ரூவின் தாய் தந்தை மற்றும் மனைவி ஆகியோர் வரும் வரை இறந்த உடலை பார்த்துக் கொள்ளும்படி கதாநாயகன் குங்கும ராஜிடம் கூறிவிட்டு கிளம்புகிறார்கள்.

வடமாநில இளைஞன் பர்வேஸ் மெஹ்ரூவின் குடும்பத்தினர் இறந்த தனது மகனின் உடலை பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லையா? என்பதுதான் இந்த ரயில் திரைப்படத்தின் மீதி கதை.

இந்த ரயில் திரைப்படத்தில் புதுமுக கதையின் நாயகனாக குங்குமராஜ் நடித்திருக்கிறார்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் குங்குமராஜ், மண் மணம் மாறாமல் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

முதல் திரைப்படம் என்று நம்ப முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு கொடுத்து தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

இந்த ரயில் திரைப்படத்தில் புதுமுக கதையின் நாயகியாக வைர மாலா நடித்துள்ளார்.

புதுமுக கதையின் நாயகியாக நடித்திருக்கும் வைரமாலா மண் சார்ந்த மனிதர்களாக ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கிறார்.

இருவருக்கும் அறிமுகம் ஆயிருக்கும் முதல் திரைப்படம் என்று நம்ப முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு கொடுத்து இருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

வட இந்திய வாலிபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பர்வேஸ் மெஹ்ரூ, அறிமுக கதாநாயகனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரமேஷ் வைத்யா, அறிமுக கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செந்தில் கோச்சடை, பர்வேஸ் மெஹ்ரூ தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிண்ட்டூ உள்ளிட்ட நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் பொருத்தமான தேர்வாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கதை நடக்கும் இடத்துக்கு நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் எஸ்.ஜே. ஜனனியின் இசை காட்சிகளுக்கு உயிரோட்டம் அளித்திருப்பதோடு, பின்னணி இசை திரைப்படத்தில் இயல்புத்தன்மை மாறாமல் பயணிக்க வைக்கிறது.

தமிழகத்திற்கு வேலை தேடி வரும் வட மாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் வேலை செய்பவர்களை கேவலமாக பார்ப்பவர்கள் மற்றும் பேசுபவர்களுக்கு கன்னத்தில் அறை ஒன்று வைக்கும் விதத்தில் கதையை திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் பாஸ்கர் சக்தி.

தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் பெரும்பாலனவர்கள் குடிக்கு அடிமையாகி, உழைப்பின் மீதும் தனது குடும்பத்தின் மீதும் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாமல் மிகவும் சோம்பேறிகளானதால் தான், வட மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் இங்கு அதிகளவில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது, என்பதை மிகவும் அழுத்தமாக சொன்னதோடு “யாராலும் யாரோட வாய்ப்பையும் கெடுக்கவோ தட்டிப்பறிக்கவோ முடியாது, என்பதை இந்தத் திரைப்படம் மூலம் மிகவும் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சக்தி.

மொத்தத்தில் – இந்த ‘ரயில்’ திரைப்படம் மிக நெகிழ்ச்சியான பயணமாக இருப்பதால் தமிழக மக்களும் கண்டிப்பாக பயணம் செய்யலாம்.