னசவாதி திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள்:- அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், சுஜித் சங்கர், ஜி.எம். சுந்தர், சுஜாதா, ரம்யா சுப்ரமணியன், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த், அருள் ஜோதி, தீபா. மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சாந்தகுமார்.
ஒளிப்பதிவாளர் :- சரவணன் இளவரசு.
படத்தொகுப்பாளர் :- வி.ஜே. சாபு ஜோசப்.
இசையமைப்பாளர் :- தமன் எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி. சரஸ்வதி சினி கிரியேஷன்.
தயாரிப்பாளர் :- சாந்தகுமார்.
சித்த மருத்துவரான கதாநாயகன் அர்ஜுன் தாஸ், தன் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து அமைதியான சூழ்நிலையில் வாழ வேண்டும் என்பதற்காக கொடைக்கானலில் சித்த மருத்துவமனை ஆரம்பித்து அங்கேயே கொடைக்கானலில் வாழும் மக்களுக்கு அனைவருக்கும் மருத்துவம் பார்த்து கொண்டு, இயற்கை மற்றும் உயிரினங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் கதாநாயகி தான்யா ரவிசந்திரனுக்கும், அர்ஜுன் தாஸ் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது.
கொடைக்கானலுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு காவல்துறை ஆய்வாளர் சுஜித் சங்கர், கதாநாயகன் அர்ஜுன் தாஸை பார்த்தவுடன் கோபடமடைவதோடு, அவரது அமைதியான வாழ்க்கையை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்.
தன் மீது காவல்துறை ஆய்வாளர் சுஜித் சங்கர், எதற்காக வன்மத்தை கக்குகிறார் என்று புரியாமல் குழம்பும் கதாநாயகன் அர்ஜுன் தாஸ்.
காவல்துறை ஆய்வாளர் சுஜித் சங்கர், அவர் என்னதான் தனக்கு தீமை செய்தாலும் அதற்கு எதிர்விணை காட்டாமல் ஒதுங்கி செல்லவே முயற்சிக்க, கதாநாயகன் அர்ஜுன் தாஸ் விடுவதாக இல்லை.
இப்படியே தொடரும் அவரடைய வன்மத்துடன், கதாநாயகன் அர்ஜுன் தாஸின் வாழ்க்கையை என்ன செய்தது?, காவல்துறை ஆய்வாளர் சுஜித் சங்கர், அர்ஜுன் தாஸ் மீது பழிவாங்க துடிக்கும் காரணம் என்ன?, அர்ஜுன் மறக்க நினைக்கும் அவரது கடந்தகால வாழ்க்கை என்ன? என்பதுதான் இந்த தான் ‘ரசவாதி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ரசவாதி திரைப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், வில்லனாக நடித்தாலும் சரி, கதாநாயகனாக நடித்தாலும் சரி, இறுக்கமான மனநிலையோடு இருக்கும் கதாபாத்திரங்களை மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்திலும் அப்படிப்பட்ட கதாபாத்திரம் தான் என்றாலும், இதில் அதிகமான காதல் காட்சிகளில் நடித்து தனது இறுக்கத்துடன், திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் இறுக்கத்தையும் போக்கியிருக்கிறார்.
ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகளில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகன் அர்ஜுன் தாஸ், பல இடங்களில் குறைவான வசனங்கள் பேசினாலும், முகத்திலும் பார்வையிலேயே தனது உணர்வுகளையும் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
இந்த ரசவாதி திரைப்படத்தில் கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், அளவான அழகோடும், அற்புதமான நடிப்போடு ரசிகர்களை கவர்கிறார்.
இந்த ரசவாதி திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக ரேஷ்மா வெங்கடேஷ் எடுத்திருக்கிறார்.
மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ரேஷ்மா வெங்கடேஷ், பரதநாட்டிய நடனத்தில் தொடங்கி, தனது இல்லற வாழ்வின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காட்சி என தனது பார்வையாலும், அழகிலும் நடிப்பாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் சுஜித் சங்கர், வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் தனது நடிப்பின் மூலம் மிக அருமையாக நடித்திருக்கிறார்.
ஜி.எம்.சுந்தர், ரம்யா சுப்ரமணியன், ரிஷிகாந்த் என்று மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக வந்து போகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சரவணன் இளவரசு கொடைக்கானலின் அழகை மட்டும் இன்றி அங்கிருக்கும் அமைதியான சூழலுடன் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் தமன்.எஸ்-ன் இசையில் பாடல்கள் கதைக்களத்திற்கு ஏற்றவாறு அமைதியாகவும், மனதை வருடுவது போலவும் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டத்துடன் பயணித்திருக்கிறார்.
ஒரு சாதாரண காதல் கதை தான் என்றாலும், அதை வைத்து கொண்டு இயக்குநர் சாந்தகுமார் பேசியிருக்கும் விசயங்கள் அனைத்தும், சுவாரஸ்யமாக மட்டும் இன்றி சமூகத்திற்கு தேவையானவையாகவும் அமைந்திருக்கிறது.
மொத்தத்தில், ‘ரசவாதி’ திரைப்படம் ரசிகர்கள் ரசனையாளர்களை ரசிக்க வைக்கும்.
ரேட்டிங் 2.75./5.