இன்றைய ராசிபலன்கள்.ன 06/07/2024
ஆனி 22 சனிகிழமை 06/07/2024 இன்றைய ராசிபலன்கள்.
மேஷம் – ராசி.
நண்பர்களுடன் பயணங்கள் சென்று வருவீர்கள். சேவை நிமித்தமான செயல்பாடுகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பெண்கள் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவுகள் தேவைக்கு ஏற்ப இருக்கும். வியாபாரத்தில் மறைமுகமான செயல்பாடுகளின் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
அஸ்வினி : அனுபவம் ஏற்படும்.
பரணி : தனவரவுகள் கிடைக்கும்.
கிருத்திகை : போட்டிகளை சமாளிப்பீர்கள்.
ரிஷபம் – ராசி.
மனதளவில் சிறு சிறு மாறுதல்கள் மூலம் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் அமையும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு முன்னேறுவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : முன்னேற்றமான நாள்.
மிருகசீரிஷம் : வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம்- ராசி.
அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுமையை கையாள்வது நல்லது. கலைத்துறைகளில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
மிருகசீரிஷம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
திருவாதிரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : பயணங்கள் மேம்படும்.
கடகம் – ராசி.
வியாபாரம் நிமித்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். கலை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளில் அனுசரித்துச் செல்லவும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : அனுசரித்துச் செல்லவும்.
சிம்மம் – ராசி.
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். மனதில் வித்தியாசமான கற்பனைகள் உண்டாகும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து செயல்படவும். குழந்தைகளின் சுப காரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
மகம் : தெளிவுகள் பிறக்கும்.
பூரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.
கன்னி – ராசி.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். உயர்கல்வி தொடர்பான தேடல் அதிகரிக்கும். வர்த்தக துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணங்களில் சற்று கவனம் தேவை. வாழ்வு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.
உத்திரம் : மாற்றமான நாள்.
அஸ்தம் : தேடல்கள் அதிகரிக்கும்.
சித்திரை : மேன்மையான நாள்.
துலாம் – ராசி.
திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
சித்திரை : புரிதல்கள் அதிகரிக்கும்.
சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.
விசாகம் : ஆதரவுகள் கிடைக்கும்.
விருச்சிகம் – ராசி
குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம் : மாற்றம் ஏற்படும்.
கேட்டை : குழப்பமான நாள்.
தனுசு – ராசி.
தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். மறைமுகமான சில தடைகளை அறிந்து கொள்வீர்கள். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் லாபகரமான சூழல் அமையும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பலம், பலவீனத்தை உணர்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
மூலம் : அனுகூலம் உண்டாகும்.
பூராடம் : லாபகரமான நாள்.
உத்திராடம் : முடிவுகள் கிடைக்கும்.
மகரம் – ராசி.
தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.
உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : ஆர்வம் மேம்படும்.
அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.
கும்பம் – ராசி.
கால்நடைகள் மூலம் ஆதாயமடைவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் நிமித்தமான பிரச்சனைகள் குறையும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
அவிட்டம் : இன்னல்கள் குறையும்.
சதயம் : இழுபறியான நாள்.
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
மீனம் ராசி.
அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். முயற்சிக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.
ரேவதி : ஒத்துழைப்பு மேம்படும்.