ரெபல் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- G.V.பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, V.P. வெங்கடேஷ், ஆண்டனி, ஆதித்யா பாஸ்கர், கருணாஸ், தமிழ் மணி, ஆதிரா பாண்டி லட்சுமி, ஷாலு ரஹீம், சுப்பிரமணிய சிவா, கல்லூரி வினோத், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- R.S. நிக்கேஷ்.

ஒளிப்பதிவாளர் :- அருண் ராதா கிருஷ்ணன்.

படத்தொகுப்பாளர் :- வெற்றி கிருஷ்ணன்.

இசையமைப்பாளர் :- G.V.பிரகாஷ் குமார்.

தயாரிப்பு நிறுவனம் :- ஸ்டூடியோ க்ரீன்.

தயாரிப்பாளர்கள் :- K..E. ஞானவேல் ராஜா, நேஹா ஞானவேல் ராஜா.

1980. காலகட்டங்களில் கேரளாவை பின்னணியாக வைத்து, மூணாறு தமிழ் தேயிலை தோட்டங்களில் கூலி தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் தமிழர்கள் தங்களைப் போன்று தங்களது பிள்ளைகளும் இதே போல் தேயிலைத் தோட்டத்தில் அடிமையாக பணிபுரிய வேண்டாம் என தனது பிள்ளைகளின் வாழ்க்கையில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என கல்லூரியில் சேர்ந்து பிள்ளைகள் எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

பட்டப்படிப்பு படிப்பதற்காக பாலக்காட்டில் உள்ள அரசினர் கல்லூரியில் கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஆதித்யா பாஸ்கர் கல்லூரி வினோத் மூவருக்கும் அந்தக் கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைக்கிறது.

அரசினர் கல்லூரியில் சேர்வதற்காக கதாநாயகன் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஆதித்யா பாஸ்கர் கல்லூரி வினோத் மூவருக்கும் பாலக்காடு செல்கிறார்கள்.

ஆனால், அந்த கல்லூரியில் கேரளாவை சேர்ந்த மலையாள மாணவர்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எதுவும் தமிழகத்திலிருந்து வரும் தமிழ் மாணவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடைப்பதில்லை.

அந்த அரசினர் கல்லூரியில், இருக்கும் இரண்டு மாணவர் அமைப்புகள் தமிழகத்திலிருந்து வந்து கல்லூரியில் சேரும் தமிழக மாணவர்களை ராக்கிங் என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் கொடுமை படுத்துகிறார்கள்.

இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டு சகித்துக் கொண்டு தனது தாய் தகப்பன் கஷ்டப்படுவதை புரிந்து கொண்டு எப்படியாவது பட்ட ப்படிப்பை முடித்துவிட வேண்டும் என அடங்கி செல்கிறார்கள்.

தமிழ் மாணவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் தலைமையில் ஒரு தமிழ் மாணவர் படை ஒன்று உருவாகிறது.

அந்தக் கல்லூரியில் கல்லூரி சேர்மனுக்கான தேர்தல் அறிவிக்கப்படுகிறது.

அந்தத் தேர்தலில் இரண்டு மாணவர் அமைப்புகளும் போட்டியிட அவர்களை எதிர்த்து தமிழ் மாணவர்கள் படை களம் இறங்குகிறது.

அந்தக் கல்லூரியில் அறிவிக்கப்பட்ட தேர்தலில் இரண்டு அமைப்புகளை எதிர்த்து களம் இறங்கிய தமிழ் மாணவர் படை வெற்றி பெற்றதா? வெற்றி பெறவில்லையா? என்பதுதான் இந்த ரெபல் திரைப்படத்தின் மீதி கதை.

இந்த ரெபல் திரைப்படத்தில் கதாநாயகனாக ஜீவி பிரகாஷ் குமார் எடுத்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்தில் நடிப்பு ஆக்சன் என அனைத்து விஷயங்களிலும் அற்புதமாக நடித்திருக்கிறார்.

இந்த ரெபல் திரைப்படம் ஜி.வி.பிரகாஷ் குமாரை கதாநாயகனாக  அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறது.

கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார், கல்லூரியில் தமிழ் மாணவர்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடும் காட்சிகளில், கண்களில் அனல் பறக்க, நடிப்பில் ஆக்ரோஷம் தெறிக்க, மாணவ புரட்சியாளராக மிரட்டுகிறார்.

இந்த ரெபல் திரைப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மமீதா பைஜுவின் பிரேமலு திரைப்படத்தில் அவருடைய கதாப்பத்திரத்தை திரைப்பட ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரசித்தனர்.

ஆனால், அவரை ரெபெல் திரைப்படத்தில் கதாநாயகியாகி அல்லாமல் திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரமாக கையாண்டு ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார்கள்.

அந்த பாலக்காடு அரசினர் கல்லூரியில் பேராசிரியராக நடித்திருக்கும் கருணாஸ் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தையாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, இரண்டு கதாபாத்திரமும் படிப்பு மட்டுமே ஒருவரின் வாழ்க்கை நிலையை மாற்றும், என்பதையும் அதைப்பெறுவதற்கு எத்தகைய இன்னல்கள் வந்தாலும் தாங்கி கொள்ளலாம் என்பதை வலியுறுத்தும் கதாபாத்திரங்களாக இருவரும் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

தமிழக மாணவர்களாக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி ஆகியோர் திரைக்கதையோட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறார்கள்.

பாலக்காடு அரசினர் கல்லூரியில் இருக்கும் இரண்டு மாணவர்கள் அமைப்பின் தலைவர்களாக நடித்திருக்கும் வெங்கடேஷ் மற்றும் ஷலுரஹீம் அடக்குமுறையின் வன்மத்தை தங்களது நடிப்பில் மிகவும் நேர்த்தியாக கதாபாத்திரத்தின் மூலம் காண்பித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு மூலம் 1980ம காலக்கட்டத்தில் நடக்கும் கதையை அதிகம் மெனக்கெடலுடன் காட்சிப்படுத்திருப்பது மிக அருமை.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதையோட்டத்திற்கு ஏற்ற வகையில் இருப்பதோடு, கேட்கும் விதமாகவும் அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின்
பின்னணி இசை மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.

1980-ம் காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ், எடுத்துக் கொண்ட கதைக்களம் மிகச்சிறப்பாக இருந்தாலும்.

இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ், திரைக்கதை அவ்வளவு அழுத்தமாகவும் இல்லை வலுவாகவும் இல்லை இரண்டாம் பாதியில் கல்லூரி எலக்‌ஷன் காட்சிகளை மட்டுமே வைத்து கதை நகர்கிறது, கேரளாவில் உள்ள அரசியலை தெள்ளத் தெளிவாக கூறவில்லை, அது திரைப்பட ரசிகர்களை சலிப்பு தட்டுகிறது.

திரைப்படத்தின் முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு பழிவாங்க ரெபலாக மாறும் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் குமார் ரெபலாக மாறிய பின்னர் காணாமல் போவது திரைப்படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்துள்ளது.

ரெபல் என்பது புரட்சியாளனை குறிக்கும் ஆங்கிலச் சொல்.

ஆனால், குறைந்தபட்சம் ரெபில் என்ற புரட்சியாளனை அசிங்கப்படுத்தியது போல் இருக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘ரெபல்’ புரட்சி இல்லாத ஒரு திரைப்படம்.