ரோமியோ திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :-  விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி, ஷா ரா, ரோஜு, ஷாலினி விஜயகுமார், அத்வைத், ஜெய சம்ரிதா, முரளி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- விநாயக் வைத்தியநாதன்.

ஒளிப்பதிவாளர் :- ஃபரூக் .ஜே பாஷா.

படத்தொகுப்பாளர் :- விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளர் :- பரத் தனசேகர்.

தயாரிப்பு நிறுவனம் :- விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்.

தயாரிப்பாளர் :- மீரா விஜய் ஆண்டனி.

கதாநாயகன் விஜய் ஆண்டனி மலேசியாவில் ஒரு மிகப்பெரிய உணவகத்தில் வேலை பார்த்துவிட்டு தனது சொந்த ஊரான  தென்காசிக்கு திரும்பி வருகிறார்.

வயது அதிகரித்து  கொண்டிருப்பதால் கதாநாயகன் விஜய் ஆண்டனியை திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் மற்றும் சொந்த பந்தங்கள்  வற்புறுத்துகிறார்கள்.

ஆனால், கதாநாயகன் விஜய் ஆண்டனி நான் காதலித்து தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறிவிடுகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க  சென்னையில் திரைப்பட உலகில் மிகப்பெரிய கதாநாயகியாக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் கதாநாயகி மிருணாளினி ரவி.

தன் தாத்தாவின் மறைவுக்கு தனது சொந்த ஊரான தென்காசிக்கு கதாநாயகி மிருணாளினி ரவி வருகிறார்.

கதாநாயகி மிருணாளினி ரவியை சாவு வீட்டில் பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் கதாநாயகன் விஜய் ஆண்டனி.

கதாநாயகி மிருணாளினி ரவியை தான் திருமணம் செய்து கொள்ள கதாநாயகன் விஜய் ஆண்டனி ஆசைப்படுகிறார்.

முதலில் திருமணத்தை வேண்டாம் என்று கூறும்  கதாநாயகி மிருணாளினி ரவி, ஒரு கட்டத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார்.

இருவருக்கும் திருமணம் முடிந்த மறுநாளே கதாநாயகன் விஜய் ஆண்டனியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என கேட்கிறார் கதாநாயகி மிருணாளினி ரவி,.

இறுதியில் கதாநாயகன் விஜய் ஆண்டனியிடம் இருந்து கதாநாயகி மிருணாளினி ரவி விவாகரத்து கேட்க காரணம் என்ன? கதாநாயகன் விஜய் ஆண்டனி விவாகரத்து கொடுத்தாரா? விவாகரத்து கொடுக்கவில்லையா? என்பதுதான் இந்த ரோமியோ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ரோமியோ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இந்த ரோமியோ  திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி இயல்பான நடிப்பை கொடுத்து அருமையான நடித்திருக்கிறார்.

தன் மனைவி கதாநாயகி மிருணாளினி ரவி காதலிக்க இவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.

குறிப்பாக திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்காக நடிகராக மாறும் காட்சியில் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

இந்த ரோமியோ திரைப்படத்தில் கதாநாயகியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார்.

கதாநாயகி மிருணாளினி ரவிக்கு அதிகளவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.

கதாநாயகி மிருணாளினி ரவி  கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் சிறப்பாக நடித்து இருக்கிறார்.

கதாநாயகன் விஜய் ஆண்டனியின் காதலுக்கு உதவி செய்பவராக வரும் யோகி பாபு ஒரு சில இடங்களில் மட்டுமே நன்றாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் விஜய் ஆண்டனியின் மாமாவாக வரும் விடிவி கணேஷ், விஜய் ஆண்டனி தந்தையாக வரும் இளவரசு, ஷா ரா ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் பெரிதும் உதவி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பருக் ஜே பாஷாவின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் பருக் ஜே பாஷாவின்  வெளிநாடு, கிராமம், சிட்டி என அழகாக இவரது ஒளிப்பதிவின் மூலம் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் பரத் தனசேகர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் பரத் தனசேகர் பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்.

தனது இளம் வயதில் தொலைத்த காதலை ஒருவர், திருமண வயதில் காதலை தேடுவதை மையமாக வைத்து இந்த ரோமியோ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன்.

திரைப்படம் பார்க்கும் பெண்கள் அறிவு போன்ற ஒரு கணவர் அமைய மாட்டாரா, என  நினைக்குபடி கதாநாயகன் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கும் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் மிகப்பெரிய பாராட்டுக்கள்.

மொத்தத்தில், இந்த ‘ரோமியோ’ திரைப்படம் பார்க்கும் பெண் ரசிகர்களின் மனதில் இப்படி ஒரு கணவர் நமக்கு அமைய மாட்டாரா என ஏங்கும் அளவுக்கு திரைப்படம் உள்ளது.

ரேட்டிங்:- 3./5.