ரூட் நம்பர் 17 திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.75./5.

நடிகர் & நடிகைகள் :- ஜித்தன் ரமேஷ், அஞ்சு ஓடியா, மதன் குமார், ஹரேஷ் பெராடி, டாக்டர். அமர் ராமச்சந்திரன், ஜெனிஃபர்ட், மாஸ்டர் நிஹல், டைட்டஸ் ஆபிரகாம், பேரோலிக் ஜார்ஜ், அகில் பிரபாகர், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அபிலாஷ் ஜி தேவன்

ஒளிப்பதிவாளர் :- பிரசாந்த் பிரணவம்.

படத்தொகுப்பாளர் :- அகிலேஷ் மோகன்.

இசையமைப்பாளர் :- ஓசெப்பச்சன்

தயாரிப்பு நிறுவனம் :- நெனி என்டர்டெயின்மென்ட்ஸ்.

தயாரிப்பாளர் :- டாக்டர். அமர் ராமச்சந்திரன்.

ரேட்டிங் :- 2.75./ 5.

அமைச்சர் ஹரிஷ் பெராடியின் மகன் கார்த்திக் மற்றும் அவருடைய காதலி அஞ்சு ஓடியாவுடன் காட்டுப்பகுதிக்கு செல்கிறார்

அப்போது அந்த காதல் ஜோடி கார்த்திக் மற்றும் அவருடைய காதலி அஞ்சு ஓடியா இருவரையும் ஜித்தன் ரமேஷ், கடத்துகிறார்.

கடத்திய அவர்களை அந்த காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பாதாள அறையில் வைத்து அவர்கள் இருவரையும் கொடுமை படுத்துகிறார்.

காணாமல் போன அமைச்சர் ஹரிஷ் பெராடியின் மகன் கார்த்திக் மற்றும் அவருடைய காதலி அஞ்சு ஓடியாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் இறங்க, அந்த காட்டுப் பகுதியில் இதுபோல் பல மர்ம சம்பவங்கள் நடந்திருப்பது காவல்துறையினர்க்கு தெரிய வருகிறது.

அமைச்சர் ஹரிஷ் பெராடியின் மகன் கார்த்திக் மற்றும் அவருடைய காதலி அஞ்சு ஓடியாவை கொடுமை படுத்தும் சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் ஜித்தன் ரமேஷ் யார்?, எதற்காக இப்படி செய்கிறார்? என்பது தான் ‘ரூட் நம்பர் 17’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ரூட் நம்பர் 17 திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ், நடித்திருக்கிறார்.

முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜித்தன் ரமேஷ், சைக்கோ தனமான வில்லனாக காட்டுப் பகுதியில் வாழ்ந்தாலும், உடை, காலணி போன்றவற்றின் மூலம் ஏதோ நகர்ப்புறத்தில் வாழ்பவராகவே வாழ்ந்து வருகிறார்.

அதிகம் பேசாமல் நடிப்பிலேயே திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை பயமுறுத்த முயற்சித்திருப்பவர் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

சைக்கோத்தனமான வில்லனாக நடித்திருப்பவர், பிளாஷ்பேக்கில் வேறு ஒரு லுக்கில் நடித்து கவனத்தை ணஈர்த்தார்.

அமைச்சர் ஹரிஷ் பெராடியின் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்திக் அவருடைய காதலியாக நடித்திருக்கும் அஞ்சு ஓடியா, அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி, காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் டாக்டர்.அமர் ராமச்சந்திரன், காவல்துறை காவலராக நடித்திருக்கும் அருவி மதன் என மற்ற அனைத்து கதாபாத்திரத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்.

அந்த பாதாள அறையை சிறு இடத்தில் காட்சிகளை நேர்த்தியாக திரைப்படமாக்கி இருக்கும் ஒளிப்பதிவாளர் பிரஷாந்த் பிரணவம், திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது

இசையமைப்பாளர் அவுசிப்பச்சனின் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை அனைத்து திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

காட்டுப்பகுதியில் நடக்கும் திகில் சம்பவங்களை மையமாக வைத்துக் கொண்டு திரைக்கதையை வழக்கமான பாணியில் ஒரு திரைப்படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன், திகில் காட்சிகளுக்காக அதிகம் மெனக்கெடாமல் அசால்டாக காட்சிகளை அருமையாக கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘ரூட் நம்பர் 17’ திரைப்படத்தில் சில குறைகள் இருந்தாலும் திரில்லர் திரைப்பட ரசிகர்களுக்கு ஏற்ற திரைப்படமாக இருக்கிறது.