ருத்ரன் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.5./ 5.
நடிகர் நடிகைகள் :- ராகவா லாரன்ஸ், சரத் குமார், நாசர், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கதிரேசன்.
ஒளிப்பதிவு :- ஆர்.டி.ராஜசேகர் ஐ.எஸ்.சி.
படத்தொகுப்பு :- ஆண்டனி.
இசை :- ஜி.வி.பிரகாஷ் குமார் – சாம் சிஎஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி.
தயாரிப்பாளர் :- கதிரேசன்.
ரேட்டிங் :- 2.5./ 5.
தமிழ் திரைப்பட உலகம் ஹாலிவுட் வரை சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படிப்பட்ட திரைப்படங்கள் வந்தால் தமிழ் திரைப்படங்கள் கோடம்பாக்கத்தை தாண்டுவது கடினம்.
தன் தாய் தந்தையுடன் வேலை தேடிக்கொண்டிருக்கும் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்
தனது தாயின் மீது அளவு கடந்த பாசத்தை வைத்துள்ளார்.
இந்த சமயத்தில் கதாநாயகி பிரியா பவானி ஷங்கரை சந்திக்கும் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் பார்த்ததும் காதல் வயப்படுகிறார்.
கதாநாயகி பிரியா பவானி சங்கரிடம் காதலை கூறி இருவரும் காதலித்து வருகிறார்கள்.
இந்த காதல் திருமணம் வரை செல்லும் நேரத்தில் கதாநாயகன் ராகவா லாரன்ஸின் தந்தைக்கு பிரச்சனை வருகிறது.
கதாநாயகன் ராகவா லாரன்ஸ் தந்தை ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
டிராவல்ஸ் நிறுவனத்தை பெரிதாக்குவதற்காக ஆறு கோடி ரூபாய் கடன் வாங்கி கதாநாயகன் லதா லாரன்ஸ் இன் தந்தையின் நண்பர் அந்த ஆறு கோடிபணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிடுகிறார்.
கடன் சுமையில் ஆளான கதாநாயகன் ராகவா லாரன்ஸின் தந்தையின் நண்பன் இப்படி செய்து விட்டானே என நினைத்து நினைத்து நெஞ்சுவலி ஏற்பட்டு கதாநாயகன் தந்தை இறந்துவிடுகிறார்.
தன் தந்தை வாங்கிய கடனை எல்லாம் அடைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்படுகிறார் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் வெளிநாடு சென்று கடனை அடைத்து விடலாம் என்ற முடிவை எடுக்கிறார்.
கதாநாயகன் ராகவா லாரன்ஸுக்கு கம்பெனியில் வெளிநாடு சென்று வேலை பார்க்க ஒரு ஆஃபர் வருகிறது.
வெளிநாடு வேலைக்கு செல்லும் வாய்ப்பை குடும்பத்திற்காக தட்டி கழுத்த கடனை அடைக்க வேண்டிய பொறுப்பு தன்னிடம் இருப்பதால் வெளிநாட்டு வேலையை மீண்டும் மேனேஜரிடம் கூறி அந்த வெளிநாட்டு வேலையை அமருகிறார்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் தலைமறைவாக இருந்து வில்லன் சரத்குமாரின் நெருங்கிய அடியாட்கள் ஒவ்வொருவரையும் கொன்று வருகிறார்.
இறுதியில், கதாநாயகன் ராகவா லாரன்ஸ் ஏன் தலைமறைவாக இருக்கிறார்..? வில்லன் சரத்குமாரை கதாநாயகன் ராகவா லாரன்ஸ் பழிவாங்குவதற்கான பின்னணி என்ன..? என்பதுதான் இந்த ருத்ரன் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்திருந்தார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் அவருடைய நடிப்பில் எந்த ஒரு புதுமையும் இல்லை.
இதற்கு முன்பு ராகவ லாரன்ஸ் நடித்த அனைத்து திரைப்படங்களின் சாயலும் இந்த ருத்ரன் திரைப்படத்தில் தெரிகிறது.
ஆக்சன் காட்சிகளில் பழங்காலத்தில் உள்ள தெலுங்கு திரைப்படங்களுக்கு மிகப்பெரிய டஃப் கொடுக்கிறார்.
இந்த ருத்ரன் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.
கதாநாயகி பிரியா பவானி சங்கரின் காதல் காட்சிகள் மிகப்பெரிய அளவில் நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.
சரத் குமார், நாசர்,பூர்ணிமா பாக்யராஜ், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம்.
இந்த ருத்ரன் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
இயக்குனர் கதிரேசன் பழைய கதையை கையில் எடுத்து அப்படியே எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் கொடுத்திருப்பது திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
திரைப்படம்படம் முழுவதும் ரத்தம், அடிதடி என ஒரே நேர்கோட்டில் திரைக்கதை அமைந்துள்ளது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் ருத்ரன் திரைப்படம் வலுவற்ற கதையும் திரைக்கதை. அமைந்திருக்கிறது.