சாமானியன் திரை விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், மைம் கோபி, கே.எஸ். ரவிக்குமார், சரவணன் சுப்பையா, நக்ஷா சரண், லியோ சிவகுமார், வினோதினி வைத்தியநாதன், தீபா சங்கர், ஸ்ம்ருதி வெங்கட், அபர்ணதி, அறந்தாங்கி நிஷா, சரவணன் சக்தி, கஜராஜ், முல்லை, அருள் மணி, சூப்பர்குட் சுப்ரமணி, ராஜாராணி பாண்டியன், GPR கோபி, ஷிரிதா ராவ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஆர்.ராகேஷ்.

ஒளிப்பதிவாளர் :- சி அருள் செல்வன்.

படத்தொகுப்பாளர் :- ராம் கோபி.

இசையமைப்பாளர் :- இசைஞானி இளையராஜா.

தயாரிப்பு நிறுவனம் :- எட்செடெரா என்டர்டெயின்மென்ட். ஶ்ரீ நிக் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- வி மதியழகன், டி.
பாலசுப்ரமணியம், சி சதீஷ் குமார்.

ரேட்டிங் :- 2./5.

மதுரையில் இருந்து கதாநாயகன் ராமராஜன் மற்றும் நண்பன் எம்.எஸ் பாஸ்கர் சென்னைக்கு வருகின்றார்கள்.

சென்னையில் வந்து இறங்கிய கதாநாயகன் ராமராஜன் மற்றும் நண்பன் எம்.எஸ் பாஸ்கர் இருவரையும் சிறுவரயது நண்பர் ஆகிய ராதாரவியின் வீட்டில் தங்க வைக்கிறார்.

கதாநாயகன் ராமராஜன் சென்னையில் உள்ள மிகப்பெரிய வங்கிக்கு பணம் டெபாசிட் செய்வதற்காக செல்கிறார்.

இந்த நிலையில் நீண்ட நாட்களாக அந்த வங்கியை கொள்ளையடிக்க மூன்று இளைஞர்கள் திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.

அந்த மிகப்பெரிய வங்கி உள்ளே சென்ற கதாநாயகன் ராமராஜன் வங்கி உதவி மேலாளிடம் சென்று பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என கூற அந்த வங்கியின் உதவி மேலாளர் மிக மரியாதையுடன் கதாநாயகன் ராமராஜன் அமர வைக்கிறார்.

கதாநாயகன் ராமராஜன் திடீரென்று சக்தி வாய்ந்த ஆர் டி எக்ஸ்  டைம் பாம், துப்பாக்கி எல்லாம் எடுத்து வங்கியின் உள்ள மேலாளரை மிரட்டி வங்கியில் உள்ள மக்கள் வங்கி ஊழியர்கள் அனைவரையும்  தன கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.

இந்த செய்தி காட்டு தீ போல்  மக்களுக்கு மற்றும் காவல்துறை மற்றும் மீடியாக்களுக்கும் தெரிய வருகிறது.

கதாநாயகன் ராமராஜன் வாங்கிக்குள் இருக்கும் மக்களையும் வங்கியையும் மீட்க அரசாங்கத்திடம் ஒரு மிகப்பெரிய கோரிக்கை ஒன்றை வைக்கிறார்.

இந்த நிலையில் கதாநாயகன் ராமராஜன் இந்த மிகப்பெரிய வங்கியை ஆர் டி எக்ஸ்  டைம் பாம், துப்பாக்கி ஆகியதை வைத்துக் கொண்டு எதற்காக தன் வசப்படுத்தினார் என்பதற்கான காரணம் என்ன? கதாநாயகன் ராமராஜன் வைத்த கோரிக்கைகள் என்ன? கதாநாயகன் ராமராஜன் வைத்த அந்த கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்ற்றியதா? நிறைவேற்றவில்லையா? என்பதுதான் இந்த சாமானியன் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த சாமானியன் திரைப்படத்தில் ராமராஜன் 12 வருடங்களுக்குப் பிறகு கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

12 வருட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றிய கதாநாயகன் ராமராஜன் தொடக்கக் காட்சியில் அவரது “மதுரை மரிக்கொழுந்து” பாடலுடன் அவர் என்ட்ரீ கொடுக்கும் காட்சிக்கு திரையரங்குகளில் விசில் பறந்தது.

கதாநாயகன் ராமராஜனுக்கு என்று தனி ரசிகர்கள் இருந்தாலும், தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ற ஒரு கதையில், சங்கரநாராயணன் என்கின்ற கதாபாத்திரத்தில் பொருந்தவில்லையோ என நினைக்கத் தோன்றுகிறது.

தனக்கு கொடுப்பட்ட கதாபாத்திரத்தை கதாநாயகன் ராமராஜன் பட்டு தடுமாறி மிக மிக சுமாராக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ராமராஜனின் நண்பர்களாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ராதாரவி இருவரும் கதாநாயகன் ராமராஜனுக்கு மிகப்பெரிய அளவில் பக்கபலமாக இருப்பதோடு, தங்களது அனுபவ நடிப்பை கொடுத்து திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலமாக பயணித்திருக்கிறார்கள்.

இந்த சாமானியன் திரைப்படத்தில் இளம் கதாநாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் மற்றும்  இளம் கதாநாயகியாக நடித்திருக்கும் நக்ஷா சரண் காதல் அன்பு மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் மிக நேர்த்தியாக தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

வாடகை வீட்டில் தங்கி ஹவுஸ் ஓனர் டார்ச்சர் அனுபவிக்கும் தங்களுக்கு சொந்த வீடு என்ற கனவு நினைவான பிறகும், கடன் தொல்லையால் நிலைகுலைந்து போகும் இவர்களது வாழ்க்கை, திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது.

வங்கி மேலாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் போஸ் வெங்கட், கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மைம் கோபி, காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமார், தொலைக்காட்சி நிருபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபர்ணதி, காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் கஜராஜ், ஸ்ருமதி வெங்கட், வினோதினி உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் மிகவும் அருமையாக திரைக்கதையோட்டத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சி அருள் செல்வன், கதையில் உள்ள காட்சிகளுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்திருந்தாலும், கொஞ்சம் ஒளிப்பதிவில் மெனக்கெட்டிருந்தால் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கும்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கதாநாயகன் ராமராஜன் தோன்றும் இடங்களில் ஒளிப்பதிவாளர் சி. அருள் செல்வன், எந்த மெனக்கெடலும் மேற்கொள்ளவில்லை என்பது திரைப்படத்தில் மிகவும் அப்பட்டமாக தெரிகிறது.

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் இருந்தாலும், ஆனால் இவர் இசையமைத்த பாடலை போல் எதுவும் தோன்றவில்லை .

இசைஞானியின் பின்னணி இசை காட்சிகளுக்கு பொருத்தமாகவும் உயிரோட்டமாகவும் இல்லை என்பதுதான் உண்மை.

ஒரு சாமானியனுக்கு கோவம் என்னவெல்லாம் செய்யும் என்பதை மையமாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆர் ‌ராகேஷ்.

வங்கிகளில் லோன் கேட்டு வருபவர்களை எப்படி எல்லாம் நடத்துகிறார்கள் என்பதை காட்சி படுத்தியுள்ளார்.

முதல் பாதியில் உள்ள சுவாரசியம் இரண்டாம் பாதியில் இல்லை, திரைக்கதையில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

இந்த சாமானியன் திரைப்படத்தில் அதிகளவில் லாஜிக் மிஸ்டேக்குகள் திரைப்படம் முழுவதும் காணப்படுகின்றன.

இதே போல் கதை 2011 ஆம் ஆண்டு வெளியான நடிகர் ரமணா நடிப்பில் வெளியான மகான் கணக்கு திரைப்படமும் இதே கதைதான் அந்த திரைப்படத்தில் உள்ள நிறைய காட்சிகள் இந்த திரைப்படத்தில் இருக்கிறது.

மொத்தத்தில் சாமானியன் என்னும் பருத்தி மூட்டை குடோனில் இருந்திருக்கலாம்.