நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சிறையில் போடும் வரை ஓயமாட்டேன் – நடிகை விஜயலட்சுமி புகார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதையும் சொல்லவில்லை.

ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொண்டர்கள் நடிகை விஜயலட்சுமிக்கு பதிலடி கொடுக்க அவரும் பதிலடி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை விஜயலட்சுமி நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், சீமானையும், அவரது தொண்டர்களையும் சகட்டுமேனிக்கு திட்டி உள்ளார்.

’’நான் நொந்து போயிருக்கேன். சீமானை தப்பிக்க விடமாட்டேன். கமிஷனர் அலுவலத்தில் சாகும்வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கப்போறேன்.

சீமானை தூக்கி உள்ளே போடும் வரைக்கும் போராடுவேன்’’என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

மேலும் சீமான் கட்சியினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.