செம்பி திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.75./ 5.
நடிகர் நடிகைகள் :- கோவை சரளா, தம்பி ராமையா, அஷ்வின் குமார், நிலா, நாஞ்சில் சம்பத், பழ கருப்பையா, ஆகாஷ், ஞானசம்பந்தன், ஆண்ட்ரூஸ், பாரதி கண்ணன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பிரபு சாலமன்.
ஒளிப்பதிவு :- எம். ஜீவன்.
படத்தொகுப்பு :- புவன்.
இசை :- நிவாஸ் k. பிரசன்னா.
தயாரிப்பு :- ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் & ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட்ஸ்
தயாரிப்பாளர் :- R. ரவீந்திரன் அஜ்மல் கான் & ரியா.
ரேட்டிங் :- 3.75 / 5.
காடு மலை அருவி இயற்கை சார்ந்த கதையும் கதைக்களம் என்றாலே இயக்குனர் பிரபு சாலமன் மட்டுமே நினைவுக்கு வருவார்.
இயக்குனர் பிரபு சாலமனின் நிலத்தின் அரும்பிய `செம்பி’ திரைப்படம் மிகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் உணர்வுகளை பற்றியும் செம்பி திரைப்படத்தின் மூலம் கூறியிருக்கிறார்.
இந்த செம்பி திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகை கோவை சரளாவை நடிக்க வைத்திருப்பது இயக்குனர் பிரபு சாலமனை பாராட்டலாம்.
கொடைக்கானலில் உள்ள மலைப்பகுதியில் தீ விபத்தில் அப்பா அம்மாவை இழந்த தனது மகள் வழிப் பேத்தியுடன் வாழ்ந்து வருகிறார் கோவை சரளா.
தனது பேத்தியின் கனவு மற்றும் ஆசைக்காகவும் மலை பகுதியில் சின்ன சின்ன வேலைகளை செய்து சந்தோஷமாக பேத்தியை பார்த்துக் கொள்கிறார் கோவை சரளா
மலை பிரதேசங்களில் கிடைக்கும் தேன் மற்றும் காடை முட்டைகள் சிறு சிறு இயற்கை பொருட்களை சேகரித்து அதை விற்று அதில் வரும் வருமானத்தை வைத்து கொண்டு தன் பேத்தியுடன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இதனிடையே கோவை சரளாவின பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார்கள்.
என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் தனது பேத்தியை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களை பழிவாங்க நினைக்கிறார் கோவை சரளா.
காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க அங்குள்ள காவல் துறை ஆய்வாளர் கோவை சரளாவிற்கு உதவி செய்வது போல் நடித்து அவரிடம் இந்த கேசை முடிப்பதற்கு பேச்சுவார்த்தையின் போது இருவருக்கும் சண்டையில் முடிய காவல்துறை ஆய்வாளரை கோவை சரளா கொலை செய்து விடுகிறார்.
கொலை செய்துவிட்டு தனது பேத்தியை அழைத்து கொண்டு காட்டு வழியாக செல்லும் ஒரு பஸ்ஸில் ஏறி அந்த ஊரை விட்டு சென்று விடுகிறார்.
அதே பஸ்ஸில் வழக்கறிஞர் அஷ்வினுடைய உதவி கிடைக்க, இதில் சிக்கிக் கொண்டுள்ள இவர்களுக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்க அஷ்வினும் உதவி செய்கிறார்.
தனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து பழித்தீர்த்தாரா? தீர்க்கவில்லையா? என்பதுதான் இந்த செம்பி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த செம்பி திரைப்படத்தில் கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகையான கோவை சரளா குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார்.
தன் பேத்திக்கு நடந்த கொடுமையை எதிர்த்து போராட நினைப்பதிலும் பல வித்தியாசமான நடிப்பை காட்டி கோவை சரளா கைத்தட்டல் பெறுகிறார்.
வீரத்தாய் கதாபாத்திரத்தை நடித்து வாழ வைத்திருக்கிறார் கோவை சரளா.
வீரதாய்யாகவே வாழ்ந்திருக்கும் நடிப்பு ராட்சஸி கோவை சரளாவிற்க்கு விருது காத்து இருக்கிறது.
குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் சிறுமி நிலா அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சிறுமி நிலா சிறப்பான நடிப்புக்கு சபாஷ் போடலாம்.
அஷ்வின் இநத திரைப்படத்தில் மாஸ் ஹீரோ ஆகியுள்ளார்.
அஷ்வினின் அசால்டான நடிப்பில் அசுர வைத்துள்ளார்.
வழக்கறிஞராக வரும் அஷ்வின் அவர் பணியை சரியாக செய்துள்ளார்.
தம்பி ராமைய்யா நகைச்சுவை எடுபடவில்லை பஸ்ஸில் கண்டக்டராக வந்து எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
காவல்துறை ஆய்வாளராக வரும் ஆகாஷ் பசும் தோல் போர்த்திய புலியாக வில்லன் நடிப்பு அருமை.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் மூன்று இளைஞர்கள் தங்கள் நடிப்பு வெளிப்பாட்டை நன்றாக செய்துள்ளனர்.
அரசியல்வாதியாக வரும் பழ. கருப்பையா மற்றும் நாஞ்சில் சம்பத் தேர்ச்சியான நடிப்பு.
திரைப்படத்தில் வரும் பிற கதாப்பாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.
பஸ் பயணிகள் அனைவரும் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடித்துள்ளனர்.
ஜீவன் உள்ள கதையை மிக அழகாக ஆறுவிகள் மலைப்பகுதி அழகை இயற்கையோடு இணைந்து காட்சிபடுத்தியுள்ளார்
ஒளிப்பதிவாளர் ஜீவன்.
இசையமைப்பாளர் நிவாஸ் k. பிரசன்னா பின்னணி இசையில் மிகவும் கவனம் செலுத்தியிருக்கிறார்
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பாடல்கள் ரசிக்கும்படி இல்லை, கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மைனா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் பேருந்து பயணத்தை மையமாக வைத்து செம்பி திரைப்படத்தை திரில்லராக எடுத்து ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.
சில இடங்களில் தொய்வு இருப்பது திரைப்படத்தை சற்று பாதிக்கிறது.
முதல் பாதியில் உள்ள நீளத்தை குறைத்திருக்கலாம்.
உணர்வுபூர்வமான செம்பி திரைப்படம் தமிழ் திரைப்பட உலகிற்கு பெருமை சேர்க்கும்.
மொத்தத்தில் செம்பி – திரைப்படம் கண்டிப்பாக பார்க்கலாம்.