சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் நடிகர் ரஜினி கலந்து கொண்டு பேசினார்.
1971ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் ராமர், சீதை படங்களை நிர்வாணமாக ஊர்வலமாக கொண்டு வந்ததாக சர்ச்சைக்குரிய வகையில் ரஜினி பேசியிருந்தார்.
இந்த பேச்சுக்கு ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும், பல்வேறு தரப்பில் கருத்துகள் வெளியானது.
ரஜினியின் இந்த பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சையை ஏற்படுத்தும் விதமாகவும் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார்…
புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டது.
புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி வழக்கு…
பொய்யான தகவல் கூறி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக பேசிய ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறை ஆணையர் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை…
இரண்டாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரோசலின் துரை முன்பு மனு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி ரோசலி துரை