வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’!!
சென்னை 19 ஆகஸ்ட் 2022 வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’!!
தேதி: ஆகஸ்ட் 19, 2022 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION (TFAPA) இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
மூத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் திரு பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் திரு டி.ஜி. தியாகராஜன், திரு டி. சிவா, திரு ஜி. தனஞ்செயன், திரு எஸ். ஆர். பிரபு, திரு எஸ். எஸ். லலித் குமார், திரு சுரேஷ் காமாட்சி ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த சங்கத்தில் தற்போது பல முன்னணி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் உட்பட 180 உறுப்பினர்கள் உள்ளனர்.
துவங்கிய நாள் முதல் பல்வேறு சாதனைகளை இந்த சங்கம் நிகழ்த்தியுள்ளது.
அதில் முக்கியமான சில மட்டும் தங்களின் பார்வைக்கு:
* மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு, துறை சார்ந்த அனைத்து ஆலோசனை கூட்டங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
* துறை சார்ந்த அனைத்து விஷயங்களிலும் பல்வேறு தளங்களில் சிறந்த பங்களித்துள்ளது.
* நடப்பு தயாரிப்பாளர்களை ஊக்குவித்து, வழிநடத்தி, ஆதரவு அளித்து வரும் சங்கம்.
* 72 மணி நேரத்தில் உறுப்பினர்களுக்கு தலைப்பு பதிவு செய்யப்படுகிறது (ஆட்சேபனை இல்லையென்றால்).
* சென்சார் நடைமுறைக்காக 24 மணி நேரத்தில் பப்ளிசிட்டி ஒப்புதல் கடிதம் தரப்படுகிறது.
* நடப்பு தயாரிப்பாளர்களின் எந்த ஒரு உதவிக்கும் 24 மணி நேரமும் தயாராக இருக்கும் சங்க பொறுப்பாளர்கள்.
* சங்க உறுப்பினர்களுக்கு ஏற்படும் சர்ச்சைகளை தீர்த்து வைக்க தயாராக இருக்கும் பொறுப்பாளர்கள்.
* 2022-25 ஆண்டிற்கான FEFSI ஊதிய ஒப்பந்தத்தை, 100 நாட்களுக்கு மேல் நடந்த பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டு FEFSI உடன் சுமூக உடன்படிக்கை செய்துகொண்டது.
* திரைப்பட வெளியீட்டு அட்டவணை மற்றும் திரைத்துறையின் முன்னேற்ற நிலவரம் குறித்து உறுப்பினர்களுக்கு சரியான நேரத்தில், தொடர்ந்து தகவல் அளிப்பது.
* முறையான மற்றும் வெற்றிகரமான நிதி மேலாண்மை குழு.
* நடப்பு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க மேலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தலைவர் திரு பாரதிராஜாவின் வழிகாட்டுதலோடு, பொது செயலாளர் திரு டி. சிவா, பொருளாளர் திரு டி. ஜி. தியாகராஜன், துணை தலைவர்கள் திரு ஜி. தனஞ்செயன், திரு எஸ். ஆர். பிரபு மற்றும் இணை செயலாளர்கள் திரு எஸ். எஸ். லலித் குமார், திரு சுரேஷ் காமாட்சி ஆகியோரின் ஒத்துழைப்போடு சங்கம் இயங்கி வருகிறது.
சங்கத்தின் மேலாண்மை குழுவில் 12 நடப்பு தயாரிப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் விவரம் பின்வருமாறு:
திரு எஸ். நந்தகோபால், திரு பி. மதன், திரு சி. விஜயகுமார், திரு ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், திரு ஜி. டில்லி பாபு, திரு கார்த்திகேயன் சந்தானம், திரு ஆர். கண்ணன், திரு சுதன் சுந்தரம், திரு விஜய் ராகவேந்திரா, திரு ஐ.பி. கார்த்திகேயன், திரு நிதின் சத்யா, திரு பி. ஜி. முத்தையா.
ஆண்டிற்கு ஒருமுறை சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று திரைத்துறை தொடர்பான பல்வேறு விஷயங்கள் இதில் விவாதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான (2021-22) பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 27 அன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 1, 2022 அன்று தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
இதில் போட்டியிடுவதற்காக சங்கத்தின் அடிப்படை உறுப்பினர்களான நடப்பு தயாரிப்பாளர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டது.
புதிதாக தேர்ந்துடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு கூட்டத்தில் பதவி ஏற்பார்கள்.
திரைத்துறை மேம்பாட்டிற்கான பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தின் போது நிறைவேற்றப்படவுள்ளன.
சங்க உறுப்பினர்களின் நலனுக்கு பணியாற்ற TFAPA குழு இன்னும் அதிக உத்வேகத்துடன் செயல்பட உறுதியாக உள்ளது.
சங்க உறுப்பினர்கள் தமிழ் திரை உலகில் வெற்றிபெற என்றும் ஆதரவு அளிக்கப்படும்.
– TFAPA மேலாண்மை குழு
.@tfapatn completes two years of excellent service to Active Film Producers & enters the 3rd Year. Here's what the Association has achieved in the last two years. @offBharathiraja @TGThyagarajan @TSivaAmma @Dhananjayang @prabhu_sr @7screenstudio @sureshkamatchi @onlynikil pic.twitter.com/KKeCaZjdYR
— ᎷϴᏙᏆᎬ ᏔᏆΝᏀᏃ (@moviewingz) August 19, 2022