தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.!

சென்னை 07 டிசம்பர் 2022 தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

பட்டுக்கோட்டையை சேர்ந்த தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் பட்டுக்கோட்டை சிவ நாராயண மூர்த்தி உடல் நலக்குறைவால் காரணமாக இன்று காலமானார்.

தற்போது அவருக்கு வயது 67.

நடிகர் இயக்குநர் விசு மூலம் தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமானவர்.

பட்டுக்கோட்டை நடிகர் சிவ நாராயணமூர்த்தி முதல் திரைப்படமான பூந்தோட்டம் திரைப்படம் மூலம் தமிழ் திரைப்பட விழாவிற்கு நடிகனாக அறிமுகமானார்.

நடிகர் சின்னக் கலைவாணர் விவேக் மற்றும் வைகை புயல் வடிவேல் அணியில் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து காமெடி நடிகனாக பிரபலமானார்.

பெரும்பாலும் காமெடி காட்சிகளில் தோன்றி வந்த சிவ நாராயணமூர்த்தி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அஜித்குமார், தளபதி விஜய் உட்பட பலர் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பட்டுக்கோட்டை சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல் நலக்குறைவால் காலமானார்.

அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் வசித்து வந்த நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட இன்றிரவு 8.30 மணியளவில் காலமானார்.

இவருக்கு மனைவி பெயர் புஷ்பவல்லி இரண்டு மகன்கள் லோகேஷ், ராம்குமார் மற்றும் ஒரு மகள் ஸ்ரீதேவி உள்ளனர்.

இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நாளை மதியம் 02.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதனிடையே, ஊர் மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் திரையுலக வட்டாரங்களில் அவரின் இறப்பு செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.