ஒளிப்பதிவாளர் இயக்குநர் கே வி ஆனந்த் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல்.

சென்னை 30 ஏப்ரல் 2021

ஒளிப்பதிவாளர் இயக்குநர் கே வி ஆனந்த் மறைவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

இயக்குனர் ஷங்கரிடம் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கே.வி.ஆனந்த்.

கனா கண்டேன். அயன், கோ, காப்பான், மாற்றான், அனேகன், கவன் ஆகிய வெற்றிப் படங்களையும் இயக்கியவர்.

அதிகம் பேசாமல் தன் படங்களை மட்டுமே பேசவைத்தவர்.

தயாரிப்பாளர்களின் மனம் கவர்ந்தவர்.

நண்பர்கள் வட்டாரம் இவருக்கு பெரியது.

தமிழ் சினிமாவை ஆங்கிலப்படங்களுக்கு நிகராக கொண்டு செல்லும் இயக்குனர்களில் இவரின் பங்கு அதிகம் என்றால் அது மிகை இல்லை என்றே அனைவரும் சொல்வார்கள்.

அவரின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பாகும்.

அன்னாரின் குடும்பத்தாருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி இந்த இரங்கல்்் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.