2023-2026 ஆண்டிற்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தேதி அறிவிப்பு.!!
சென்னை 04 பிப்ரவரி 2023 2023-2026 ஆண்டிற்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தேதி அறிவிப்பு.!!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நடைபெறும் தேதி குறித்து முக்கிய அப்டேட் ஒன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
தமிழ் திரைப்பட உலகில் மிகவும் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.
மேலும் இநத சங்கத்தில் மிக முக்கியமான தயாரிப்பாளர் உறுப்பினராக இருக்கிறார்கள்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
சங்கத்தின் தேர்தல்
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கத்திற்கான தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
தற்போது தலைவர் முரளி ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் 2023-2026 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது,
அதில், 23-01-2023 (சனிக்கிழமை) மாலை 5.00-மணி அளவில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை வளாகத்தில் தமிழ்த் திரைப்படத்
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு : என்.ராமசாமி
தலைமையிலும், செயலாளர்கள்
திரு.ஆர்.ராதாகிருஷ்ணன், திரு.மன்னன், துணைத்தலைவர் திரு.எஸ்.கதிரேசன், மற்றும் பொருளாளர் திரு.சந்திரபிரகாஷ் ஜெயின் அவர்கள் முன்னிலையில், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அதில், சங்கத்தின் விதி எண் 16-ன் படி 2023-2026ஆம் ஆண்டிற்கான நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 26.03.2022 ஞாயிற்றுக்கிழமை, அன்று ஓய்வுபெற்ற நீதியரசர் அவர்களின் தலைமையில் தேர்தல் நடத்தலாம் என்று அனைவராலும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
அதன்படி தேர்தல் அட்டவணை கீழ்கண்டவாறு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரியின் பெயர் மற்றும் தேர்தல் நடக்கும் இடம் முடிவு செய்த பின்னர் சங்கத்தில் வாக்களிக்க தகுதியுள்ள உறுப்பினர்களுக்கு சங்க சட்டவிதிகளின் படி தெரிவிக்கப்படும் என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அட்டவணை
1. 23.02.2023 வியாழக்கிழமை காலை 11 மணி முதல் 26.02.2023 திங்கள்கிழமை மாலை 5 மணி வேட்புமனு தாக்கலுக்கான
விண்ணப்பங்கள் சங்க
அலுவலகத்தில் வழங்கப்படும்.
(ரூ.100 வரை செலுத்தி உறுப்பினர்கள்
பெற்றுக்கொள்ளலாம்).
2. 26.02.2023 மாலை 5 மணிக்கு மேல் விண்ணப்பங்கள்
வழங்கப்பட மாட்டாது.
27.02.2023 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 02.03.2023 வியாழக்கிழமை மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சங்க அலுவலகத்தில் மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்த்துவிட வேண்டும். (விண்ணப்ப படிவங்களை தபால் அல்லது Courier-ல் அனுப்பும் உறுப்பினர்கள் 02.03.2023 மாலை 4 மணிக்குள் சங்க அலுவலகத்திற்கு வந்து சேர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளபடுகிறது.)
4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் சங்க அலுவலகத்தில் உள்ள மூடி முத்திரையிட்ட பெட்டியில் 02.03.2023 மாலை 5 மணிக்கு சீல் வைக்கப்படும். பின்னர் 6 மணிக்கு விண்ணப்ப
படிவங்கள் பரிசீலனை நடைபெறும்.
5. 03.03.2023 காலை 10 மணி முதல் 05.03.2023 மாலை 4 மணி வரை வேட்புமனு விண்ணப்பங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். மாலை 4
மணிக்கு மேல் விண்ணப்பங்களை திரும்ப பெற இயலாது.
6. 05.03:2023 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
06.03.2023 திங்கள்கிழமை அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தலில் வாக்களிக்கும் தகுதிபெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது courier மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தயாரிப்பாளர்கள் சங்கத தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
பின்னர் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண மற்றும் பதவியின் விவரம்.
விவரம்கள் பின்வருமாறு:…
தலைவர் (President) ஒருவர் மட்டும் One Person only.
தலைவர் பதவிக்கு ரூபாய். 1,00,000/- (ஒரு லட்சம் மட்டும்)
துணைத்தலைவர்கள் (Vice 2 Presidents) இரண்டு நபர்கள் மட்டும் Two Person only.
செயலாளர்கள் (Secretaries)
இரண்டு நபர்கள் மட்டும் Two Person only
இணைச்செயலாளர் (Join Secretary) ஒருவர் மட்டும் One Person only.
பொருளாளர் (Treasurer) ஒருவர் மட்டும் One Person only.
மற்ற நிர்வாகிகள் பதவிக்கு
ரூ. 50,000/-(ரூ. ஐம்பதாயிரம் மட்டும்)
செயற்குழு உறுப்பினர்கள் (Executive Committee Members)
இருபத்து ஆறு மட்டும் 26 person only.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ரூபாய் 10,000 (பத்தாயிரம் மட்டும்)
வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5 மணிக்கு மேல் நடைபெறும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.