தியேட்டர்களுக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாயையும் வட்டியில்லாத கடனாக வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை :29 டிசம்பர் 2020

மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சமர்ப்பிக்கும் கோரிக்கை விண்ணப்பம்.

எங்களது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் எங்களது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் தங்களின் பொன்னான ஆட்சியில் தமிழ் திரை உலகம் நல்ல வளர்ச்சி நிலைமைக்கு வரும் என்பதில் ஐயமில்லை.

தற்போது உள்ள சூழ்நிலையில் திரையரங்குகளை நடத்துவதே மிகவும் சிரமமாக உள்ள இந்த சூழ்நிலையில் புதிய திரைப்படங்களை அமேசான் நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்களின் மூலம் புதிய திரைப்படங்களை திரையிடுவதால் திரையரங்குகளில் வசூல் குறைந்தது மட்டுமல்லாமல் பொதுமக்கள் வருகையும் கொரோனாவினால் வசூல் பாதிப்பு மட்டுமல்லாமல் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டது.

எனவே தாங்கள் அன்புகூர்ந்து எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து அந்தச் சங்கத்தினர் வெளியிட்டுள்ள தீர்மான அறிக்கையில் இது போன்று மேலும் பல கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.

1. தற்போது திரையரங்குகளில் 50 சதவீதம் மக்கள் அனுமதிப்பதற்கு பதிலாக 100% மக்களை அனுமதிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

2. திரையரங்குகளில் கொரோனா பரவுவதற்கான எந்தவித அத்தாட்சிகளும் இல்லை.

ஆகவே 100% பொது மக்களை அனுமதிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

3. த‌றபோதுள்ள சூழ்நிலையில் 12% மற்றும் 18% ஜிஎஸ்டி வரியுடன் 8% உள்ளாட்சி வரி சேரும்போது வரி பலுவினால் திரையரங்குகள் நடத்த முடியாத சூழ்நிலையும் பொதுமக்கள் வருவதற்கு 8% வரி உயர்வை நீக்கினால் மக்கள் வருகை அதிகரிக்கும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

4. திரையரங்குகளின் உரிமத்தை புதுப்பிப்பது ஒரு ஆண்டாக உள்ளதை 3 ஆண்டுகளாக மாற்றித் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

5. புதிய திரையரங்குகளுக்கு ஏற்கனவே உள்ள திரையரங்குகளை சிறிய திரையரங்க மாற்றுவதற்கும் பொதுப்பணித் துறையின் அனுமதி மட்டுமே போதும் என்று அரசு ஆணையாக விடுவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

6. தற்போது டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் திரையிடப்படுவதால் பழைய ஆப்பரேட்டர் லைசென்ஸ் முறையை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

7. திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருகை மிகவும் குறைந்துள்ளதால் பார்வையாளர்கள் இல்லாத ஒரு சூழ்நிலையில் வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

8. அண்டை மாநிலங்களான ஆந்திரா தெலுங்கானா அரசுகள் சினிமா தியேட்டர்களுக்கு கொரோனாவினால் பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதமாக மூடப்பட்டுக் கிடந்தது இந்த கொரோனா பாதிப்பிலிருந்து சினிமா தொழிலை மீட்க அந்த அரசுகள் சில சலுகைகள் அளித்துள்ளது.

1) ரூபாய்10 கோடிகுள் தயாராகும் படங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லை என்று அறிவித்துள்ளது.

2) தியேட்டர்களில் சிறப்புக் காட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

3. மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி வழங்கியுள்ளது.

4. நகரங்கள், புற நகரங்களில் உள்ள தியேட்டர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், வரை கடன் உதவியும் கிராமப் புறங்களில் உள்ள தியேட்டர்களுக்கு 5 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு இந்த கடன்களுக்கு வட்டி இல்லை என்று அறிவித்திருக்கிறது இதுபோன்ற சூழ்நிலையில் தமிழக அரசு நமது மாநிலத்தில்வழங்கி விட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தாய் உள்ளத்துடன் எங்களின் கோரிக்கைகளை ஏற்று எங்கள் திரையரங்குகளை காப்பாற்றுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்று இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்துள்ளார்கள்.