தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி.

சென்னை 19 மே 2021

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் நடிகர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் இல்லாமல் இருந்து வருகிறார்.

அவரால் பழைய படி ஆக்டிவ்வாக செயல்பட முடியவில்லை.

இதனால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறார்.

நடந்து முடிந்த 234 தொகுதி சட்டமன்றத் தேர்தலிலும் ஒரு தொகுதியில் கூட அவர் போட்டியிடவில்லை.

அவரது மனைவி பிரேமலதா போட்டியிட்டார்.

தனது கட்சி பிரச்சாரங்களில் பொதுமேடைகளில் பேசாமல் மக்களை பார்த்து கையசைத்து சைகையால் மட்டும் பேசி வாக்கு கேட்டார்.

அமமுக கூட்டணியில் இருந்த தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது.

அதன்பின்னர் ஓய்வில் இருந்து வருகிறார் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர்
நடிகர் கேப்டன் விஜயகாந்த்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மூச்சு திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது உடல்நிலை குறித்த முழு தகவல்கள் மருத்துவமனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும்