தலைக்கூத்தல் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.5/5.

நடிகர் நடிகைகள் :- சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா, கதா நந்தி, வையாபுரி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், சுஹாசினி சஞ்சீவ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

ஒளிப்பதிவு :- மார்ட்டின் டொன்ராஜ்.

படத்தொகுப்பு :- டானி சார்லஸ்.

இசை :- கண்ணன் நாராயணன்.

தயாரிப்பு நிறுவனம் :- YNOT ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர்:- எஸ். சசிகாந்த்.

ரேட்டிங் :- 3.5 / 5.

2018 ஆம் வருடம் இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய ‘பாரம்’ என்கிற திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

அதன் பிறகு இந்த தலைக்கூத்தல் கதையை வைத்து கே.டி என்கிற கருப்புதுரை எனற திரைப்படம் வெளிவந்தது.

இந்த காலத்தில் முன்பு தமிழ்நாட்டில் தென்பகுதி மாவட்டங்களில் வழக்கத்தில் இருந்த தலைக்கூத்தல் வயது முதியவர்களை கருணை கொலை செய்யும் ‘தலைக்கூத்தல்’ என்கிற கதையை மையமாக வைத்து இந்த தலைக்கூத்தல் திரைப்படத்தை இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

தமிழகத்தில் விருதுநகர் பகுதிகளில் நடந்த நடந்து கொண்டிருக்கும் கொடூரமான ஒரு நிகழ்வுதான் இந்த தலைக்கூத்தல்.

தனியார் பேங்க் ஏ.டி.எமில் காவலாளியாக வேலை செய்து வருகிறார் கதையின் நாயகன் சமுத்திரக்கனி.

கதையின் நாயகன் சமுத்திரக்கனியின் மனைவியாக கதையின் நாயகி வசுந்தரா.

இந்த சமுத்திரக்கனி வசுந்தரா இருவருக்கும் ஒரு மகள் மற்றும் கதையின் நாயகன் சமுத்திரக்கனியின் மரண படுக்கையில் வயதான தந்தை அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.

கதையின் நாயகன் சமுத்திரக்கனியின் தந்தை லிட்டில் உள்ள அனைவருக்கும் பாரமாக தோன்றுகிறார்.

கதையின் நாயகன் சமுத்திரகனியின் தந்தையையும் கொல்வதற்கு மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் திட்டமிடுகிறார்கள்.

ஆனால் பாசத் தந்தையை அநியாயமாக கொலை செய்வதற்கு சம்மதிக்காமல் கதையின் நாயகன் சமுத்திரக்கனி துடிக்கிறார்.

தன் மனைவிக்கு தெரியாமல் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து தன் தந்தைக்கு மருத்துவத்திற்கு செலவு செய்கிறார்.

கதையின் நாயகன் சமுத்திரக்கனிக்கு கடன் கொடுத்தவர் வீட்டை விற்று பணத்தை எடுத்துக்கொள்ள திட்டமிடுகிறார்.

ஏற்கனவே தந்தையை காரணம் காட்டி கதையின் நாயகன் சமுத்திரக்கனியிடம் வம்பு இழுத்த மனைவி கடன் வாங்கிய விஷயம் தெரிந்ததும் மேலும் அதிகமாக சண்டை போடுகிறார்.

கதையின் நாயகன் சமுத்திரக்கனியால் மனைவியை சமாதானப்படுத்தி குடும்பம் நடத்த முடிந்ததா? முடியவில்லையா? உயிர் ஊசலாடும் கதையின் நாயகன் சமுத்திரக்கனியின் தந்தை உயிரை காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா? என்பதுதான் இந்த தலைக்கூத்தல் திரைப்படத்தின் மீதி கதை.

இந்த தலைக்கூத்தல் திரைப்படத்தில் கதையின் நாயகனாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார்.

தன்னை பெற்ற தந்தைக்கு பாசமான மகனாகவும் தான் தாலி கட்டிய மனைவி அவமானப்படுத்துவதை தாங்கும் மிகவும் அமைதியான கணவனாகவும், தன் பெற்ற அன்பு மகளை அரவணைக்கும் பாசமான தந்தையாகவும் தனது மிக மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி  இருக்கிறார் கதையின் நாயகன் சமுத்திரக்கனி

இன்னொரு பக்கம் அலட்டிக் கொள்ளாமல் நடித்து கதாபாத்திரமாகவே மாறிப் இருக்கிறார் வசுந்தரா.

கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் சண்டை, கோபம், அன்பு என அனைத்தையும் வசுந்தரா அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மிக எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார் வசுந்தரா

கதையின் நாயகன் சமுத்திரக்கனி தந்தையின் இளம் வயது பிளாஷ்பேக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கதிர் அருமையான நடிப்பை கொடுத்துள்ளார்.

கதிரின் கெட்டப், ஹேர் ஸ்டைல், நடிப்பு என எல்லா விதத்திலும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அவருடைய காதலியாக வரும் கத்தா நந்தி சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

திரைப்படம் முழுவதும் படுத்துக்கொண்டே திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை உருக வைத்து விட்டார் கலைச் செல்வன்.

கதையின் நாயகன் சமுத்திரக்கனியின் மகளாக நடித்திருக்கும் சிறுமி, சமுத்திரக்கனியின் நண்பராக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ், வசுந்தராவின் தந்தையாக நடித்திருக்கும் பெரியவர் ஊருக்குள் குறி சொல்லும் திருநங்கை வையாபுரி என திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், மிகச் அருமையாகவும் சரியாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன் பாடல் பிண்ணனி இசை மிக அருமை.

திரைப்படத்தின் உணர்வுகளை இசையின் மூலம் திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு கவனிக்க வைத்துள்ளார் இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன்.

கிராமத்து அழகை மிக அற்புதமாகவும அருமையாகவும் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் மார்டின் டான் ராஜ்.

அப்படி ஒரு நிகழ்வையும் வாழ்க்கையும் வேதனையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

கிராமத்தில் நடக்கும் தலைக்கூத்தல் விஷயங்களை பதிவு செய்த  இயக்குனர் ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணனு பாராட்டுக்கள்.

பஞ்ச் வசனங்கள் இல்லாமல் சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து மனதை தொடும் அழுத்தமான திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

இதைப் போன்ற தரமான திரைப்படங்களை தரும் தயாரிப்பாளர் ஒய் நாட் சசிகாந்த் பாராட்டுக்குரியவர்.

இந்த தலைக்கூத்தல் திரைப்படத்திற்கு நிறைய விருதுகள் காத்துக் கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் தலைக்கூத்தல் – திரைப்படம் விளிம்புநிலை மனிதர்களின் உணர்வு.