தளபதிக்காக லிட்டில் சூப்பர் ஸ்டார் பாடிய 2வது பாடலான ‘தீ தளபதி…’ என்ற பாடல் இன்று வெளியாக உள்ளது.!!

தளபதிக்காக லிட்டில் சூப்பர் ஸ்டார் பாடிய 2வது பாடலான ‘தீ தளபதி…’ என்ற பாடல் இன்று வெளியாக உள்ளது.!!

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த ‘வாரிசு’ திரைப்படத்தை பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

தெலுங்கு மொழியிலும் தயாராகி வருவதால், இந்தப் திரைப்படம் ‘வரசுடு’ என்றப் பெயரில் மகர சங்ராந்தி அன்று வெளியாகவுள்ளது.

தளபதி விஜய் நடிகை ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ‘வாரிசு’ திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்க இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே…’ ‘ரஞ்சிதமே…’ என்ற பாடலை தளபதி விஜய் பாடியிருந்தார்.

அந்த பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை டிசம்பர் 4ஆம் தேதி இந்த ‘வாரிசு’ திரைப்படத்தில் இடம்பெறும் 2வது பாடலான ‘தீ தளபதி…’ என்ற பாடல் வெளியாக உள்ளது.

இந்த தீ தளபதி பாடலை நடிகர் நடிகர் சிலம்பரசன் டிஆர் பாடியிருக்கிறார்.

இந்த அறிவிப்பு வெளியானது முதலே தளபதி விஜய் & சிம்பு ரசிகர்களும் இந்தப் பாடலை கொண்டாடுவதற்கு தயாராக உள்ளனர்.

இந்த பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளது.

மேலும் தளபதி விஜய் சினிமா தமிழ் திரைப்பட துறைக்கு வந்து 30 ஆண்டு காலம் ஆன நிலையில்
#30YearsOfVijayism & #3DecadesOfVIJAYism என்பதையும் விஜய் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.