தி அக்காலி திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- நாசர், ஜெய் குமார், தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜை, சேகர், யாமினி, தரணி, பரத், இளவரசன், விக்னேஷ் ரவிச்சந்திரன், சபீர் அலி, மசிஹா சபீர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- முகமது ஆசிப் ஹமீத்.
ஒளிப்பதிவாளர் :- கிரி மர்பி.
படத்தொகுப்பாளர் :- இனியவன் பாண்டியன்.
இசையமைப்பாளர் :- அனீஸ் மோகன்.
தயாரிப்பு நிறுவனம்:- பி பி எஸ் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- பி உகேஸ்வரன்.
ரேட்டிங் :- 1.75/5.
நடிகர் & நடிகைகள்:- நாசர், ஜெய் குமார், தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜை, சேகர், யாமினி, தரணி, பரத், இளவரசன், விக்னேஷ் ரவிச்சந்திரன், சபீர் அலி, மசிஹா சபீர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- முகமது ஆசிப் ஹமீத்.
ஒளிப்பதிவாளர் :- கிரி மர்பி.
படத்தொகுப்பாளர் :- இனியவன் பாண்டியன்.
இசையமைப்பாளர் :- அனீஸ் மோகன்.
தயாரிப்பு நிறுவனம்:- பி பி எஸ் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- பி உகேஸ்வரன்.
ரேட்டிங் :- 1.25/5.
காவல்துறை அதிகாரியான ஜெய்குமார் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிப்பதற்கான வேலையில் இறங்குகிறார்கள்.
அந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் சிமெண்டரியில் புதைக்கப்படும் இடத்தில் இறந்த உடல்களை எடுத்துவிட்டு அந்த குழிகளில் போதை பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள், என காவல்துறை அதிகாரியான ஜெயக்குமாருக்கு தகவல் கிடைக்கிறது.
அதன்படி தகவல் கிடைத்தவுடன் அந்த சிமெண்டரியில் காவல் துறையினர் ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு பல அதிர்ச்சிகரமான பல சம்பவங்களும் உண்மைகளும் தெரிய வருகிறது.
சாத்தானை வழிப்படும் கும்பலை சேர்ந்தவர்கள் அங்கு விசித்திரமான பூஜையில் செய்வதும் மனிதர்களை பலி கொடுப்பதையும் காவல்துறை அதிகாரியான ஜெயக்குமார் கண்டுபிடிக்கிறார்.
அங்கு மனிதர்களை வைத்து பூஜையும் நரபலி கொடுப்பது பற்றியும் மேலும் இதைப் பற்றி விசாரிக்கும் போது, அந்த சாத்தானை வழிப்படும் கும்பலை சேர்ந்தவர்களின் பின்னணி பற்றியும், அதைச் சார்ந்தவர்கள் மாயமானது மற்றும் அவர்களின் மர்ம மரணம் போன்றவை பற்றி திடுக்கிடும் தகவலாக தெரிய வருகிறது.
உயர் காவல்துறை அதிகாரி தலைவாசல் விஜய் தடுத்தும், இதைப் பற்றி கண்டுபிடிக்க தீவிரம் காட்டும் காவல்துறை அதிகாரி ஜெய்குமார், இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் போது அவரைச் சுற்றி பல மர்ம சம்பவங்கள் நடைபெறுகிறது.
இறுதியில் அனைத்து மர்ம சம்பவங்களும் சாத்தானை வழிப்படும் கும்பலை சேர்ந்தவர்களை காவல்துறை அதிகாரி ஜெய் குமார் கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த ‘தி அக்காலி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெய்குமார், கிறிஸ்துவ மத போதகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாசர், காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் திரைக் கதையில் ஓட்டத்திற்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கிரி மர்பி, ஒளிப்பதிவின் மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் திரைக்கதை ஓட்டத்திற்கு கை கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அனிஷ் மோகனின் இசை மற்றும் பாடல்கள் பிண்ணனி இசை அனைத்தும் அருமை.
சாத்தான்களை வழிபடுபவர்களின் நரபலி சம்பவங்களை மையமாக வைத்துக்கொண்டு விறு விறுப்பான க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் அதை வித்தியாசமான முறையிலும் சொல்ல முயற்சித்திருக்கிறார்.
மொத்தத்தில் – இந்த ‘தி அக்காலி’ திரைப்படம் புதுமையான முயற்சி வீணாய் போனது.